சிங்கப்பூர் அதிபராகப் பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!

Photo: President Tharman Shanmugaratnam Official Facebook Page

 

 

சிங்கப்பூர் நாட்டின் அதிபராக தர்மன் சண்முகரத்னம் முறைபடி பதவியேற்றுக் கொண்டார்.

வெளிநாட்டு ஊழியர்களிடம் போலியான சிங்கப்பூர் அடையாள அட்டையை வழங்கி வேலைபார்க்க வைத்த சிங்கப்பூரரர்

சிங்கப்பூரின் இஸ்தானா மாளிகையில் இன்று (செப்.14) இரவு 08.00 மணியளவில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் சிங்கப்பூரின் 9-வது அதிபராக தர்மன் சண்முகரத்னம் பதவியேற்றுக் கொண்டார். விழாவில், சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங், துணை பிரதமரும், நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங், வெளியுறவுத்துறை அமைச்சர் டாக்டர் விவியன் பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

சிங்கப்பூர் அதிபராகப் பதவியேற்றார் தர்மன் சண்முகரத்னம்!
Photo: Singapore President Tharman Shanmugaratnam

அதேபோல், சிங்கப்பூரின் அரசு உயரதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள், சிங்கப்பூர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சுமார் 70.4% வாக்குகளைப் பெற்று, தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட சீன வம்சாவளி வேட்பாளர்கள் கொக் சாங்க் (15.72%) கின் லியான் (13.88%) ஆகியோர் வீழ்த்தி அபார வெற்றி பெற்றார். வெளிநாடுகளில் வசிக்கும் சிங்கப்பூர் மக்களில் 76% பேர் தர்மன் சண்முகரத்னத்திற்கு வாக்களித்துள்ளனர்.

Woodleigh அருகே விபத்தில் சிக்கிய 46 வயது ஆடவர் மரணம்

சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம் சுமார் 6 ஆண்டுகளுக்கு பதவி வகிப்பார். அதாவது வருகிற 2029- ஆம் ஆண்டு செப்டம்பர் 14- ஆம் தேதி வரை அதிபர் பதவியில் இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.