சிறப்பு விருந்தினராக பங்கேற்ற அமைச்சர் எஸ்.ஈஸ்வரன் – சிங்கப்பூரில் மின்சார வாகனங்களுக்கான திட்டம் என்ன?

DHL flees electric vehicle to singapore tie up minister s.iswaran carbon emmision

சிங்கப்பூர் போக்குவரத்து அமைச்சர் DHL Express நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.அதிகளவிலான வாகனங்களை மின்சாரமயமாக்கும் முயற்சியில் சிங்கப்பூர் ஈடுபட்டுள்ளது.

சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் அண்மையில் , 2030-ஆம் ஆண்டுக்குள் நாட்டின் பொதுப் பேருந்துகளின் எண்ணிக்கையில் ௫௦ விழுக்காடு மின்சாரமயமாக்கப்படும் என்று அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்தாண்டு அக்டோபர் மாதத்திற்குள் நிறுவனத்திடம் கூடுதலாக 80 மின்சார வாகனங்கள் இருக்கும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.மொத்தம் 390 விநியோக வாகனங்கள் இந்நிறுவனத்திடம் உள்ளன.லண்டனின் கிரீன்விச்சிலுள்ள DHL Express நிறுவனத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது இந்த அறிவிப்பு வெளியானது.போக்குவரத்து அமைச்சர் ஈஸ்வரன் சிறப்பு விருந்தினராக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

மின்சார வாகனங்களுக்கு மாறுவதன் மூலம் வருடத்திற்கு 323 டன் கார்பன் வெளியேற்றத்தை DHL குறைக்கும் என்று நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் கிறிஸ்டோபர் ஒங் தெரிவித்துள்ளார்.முழுமையாக மின்னூட்டம் செய்யப்பட்ட வாகனத்தால் சுமார் 339கி.மீ தூரம் வரை செல்ல முடியும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

மூன்று மணி நேரம் மின்னூட்டம் செய்வதால் கூடுதலாக 85 கி.மீ தொலைவிற்கு பயணம் செய்ய முடியும்.முழுமையாக மின்னூட்டம் செய்வதற்கு ஏறத்தாழ ௧௧ மணி நேரம் ஆகும்.

மின்வாகனங்களின் மின்னூட்ட திறனைப் பரிசோதித்து அவற்றை பயன்படுத்துவதில் அனுபவத்தைப் பெற ,இந்தாண்டு ஜனவரியில் DHL நிறுவனம் 10 மின்சார வாகனங்களைச் சோதனை செய்தது.

சிங்கப்பூரில் வர்த்தக வாகனங்களை வாங்க விரும்பும் தொழில் நிறுவனங்கள் ,வழக்கமான வாகனங்களுக்கு பதிலாக மின்வாகனங்களை தேர்ந்தெடுக்க ஊக்குவிக்கப் படுகின்றன.