சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு விளக்கம் அளித்த ஸ்கூட் நிறுவனம்!

பயணப்பைகளை எடுத்துவர முடியாமல் தவித்த ஸ்கூட் பயணிகள்: இந்தியாவில் தரையிறங்கியது - கடும் வெப்பம் தான் காரணம்
Photo: FlyScoot

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் குழுமத்துக்கு (Singapore Airlines Group) சொந்தமான ஸ்கூட் நிறுவனம் (Flyscoot), அமிர்தசரஸ் மற்றும் சிங்கப்பூர் இடையே இரு மார்க்கத்திலும் தொடர்ந்து விமான சேவைகளை வழங்கி வருகிறது. இந்த நிலையில், கடந்த ஜனவரி 18- ஆம் தேதி அன்று அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூருக்கு இரவு 07.55 PM மணிக்கு புறப்படவிருந்த ஸ்கூட் விமானம், முன்னதாகவே, அதாவது மாலை 03.45 PM மணிக்கு பயணிகளுடன் புறப்பட்டுள்ளது.

திருச்சி, சிங்கப்பூர் இடையேயான ‘ஸ்கூட்’ விமான சேவை- ஏப்ரல் வரையிலான டிக்கெட் முன்பதிவு விறுவிறு!

பயண நேரம் மாற்றம் காரணமாக, சுமார் 30- க்கும் மேற்பட்ட பயணிகளை ஸ்கூட் விமானம் விட்டு விட்டு சிங்கப்பூருக்கு சென்றுள்ளது. இதனால் ஆத்திரமடைந்த 30- க்கும் மேற்பட்ட பயணிகள் போராட்டம் நடத்தியதுடன், விமான நிலையத்தின் அதிகாரிகளிடம் புகார் அளித்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக விரிவான விளக்கத்தை அளிக்குமாறு அமிர்தசரஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் ஸ்கூட் விமான நிறுவனத்துக்கு சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகம் (Directorate General of Civil Aviation- DGCAs) நோட்டீஸ் அனுப்பி உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து, சிவில் விமான போக்குவரத்து இயக்குநரகத்துக்கு ஸ்கூட் நிறுவனம் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது. அதில், “பயண நேரம் மாற்றம் தொடர்பாக, பயணிகளுக்கு முன்கூட்டியே மின்னஞ்சல் மூலம் தகவல் தெரிவிக்கப்பட்டது. எனினும், முகவர்கள் மூலம் பயண டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்களுக்கு இந்த பயண நேர மாற்றத்தை அவர் தெரிவிக்கவில்லை. அமிர்தசரஸ் விமான நிலையத்தில் நிலவிய கடுமையான பனிமூட்டம் காரணமாகவே, பயண நேரம் மாற்றப்பட்டுள்ளது.

தீவு விரைவுச் சாலையில் வாகனங்கள் மோதி கோர விபத்து- ஐந்து பேர் மருத்துவமனையில் அனுமதி!

பாதிக்கப்பட்ட 17 பயணிகள் 14 நாட்களுக்குள் ஸ்கூட் நிறுவனத்தின் விமானத்தில் இலவசமாக முன்பதிவு செய்துப் பயணிக்கலாம் (அல்லது) 120% கட்டணத்தை வவுச்சர்கள் வடிவில் பயணிகள் பெற்றுக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.