நாட்டின் அடிப்படையில் வேலை.. ஆள் எடுப்பில் பாகுபாடு – 50 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

(Photo: Reuters)

கடந்த மூன்று ஆண்டுகளில், சிங்கப்பூரில் வேலைக்கு ஊழியர்களை எடுப்பதில் பாகுபாடு காட்டிய சுமார் 50 முதலாளிகளின் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் சுமார் 60 சதவீத பாகுபாடு, நாட்டின் அடிப்படையில் வேலைக்கு எடுப்பது தொடர்பானவை என்று மனிதவள துணையமைச்சர் கன் சியோ ஹுவாங் இன்று (மார்ச் 4) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

தமிழகத்துக்கு அனுப்பி வைக்கப்படும் சிங்கப்பூரில் உயிரிழந்த ஊழியரின் உடல்!

மூன்றில் ஒரு பங்கு பாலினம் மற்றும் வயது பாகுபாடு காரணமாகவும், மீதமுள்ள வழக்குகள் இனம், திருமண தகுதி அல்லது குடும்பப் பொறுப்புகள் போன்ற பிற வகை பாகுபாடுகளையும் உள்ளடக்கியது, என்று அவர் கூறினார்.

சதவீத வாரியாக பாகுபாடு வழக்குகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் லியோன் பெரேராவின் கேள்விக்கு அவர் பதிலளித்தார்.

மனிதவள அமைச்சகம் (MOM) வேலையிட பாகுபாட்டை தீவிரமாக பார்க்கிறது.

கடந்த மூன்று ஆண்டுகளில், அதே குற்றத்தை மீண்டும் செய்த குற்றவாளிகள் யாரும் பிடிபடவில்லை என்பதையும் MOM சுட்டிக்காட்டியது.

சிங்கப்பூரில் ஊழியர்களை ஆட்குறைப்பு செய்யவுள்ள நிறுவனம்!