சிங்கப்பூரில் உற்பத்தியான மின்சார மோட்டார் சைக்கிள்களை SMRT நிறுவனம் விநியோகிக்க ஒப்பந்தம்

(Photo: TODAYonline)

வணிக மற்றும் கார்ப்பரேட் வாடிக்கையாளர்களுக்கு மின்சார மோட்டார் சைக்கிள்களை உருவாக்கி, சந்தைப்படுத்தி மற்றும் விநியோகம் செய்வதற்கு இஎஸ்டி நிறுவனத்துடன் எஸ்எம்ஆர்டியின் துணை நிறுவனமான ஸ்ட்ரைட்ஸ் டிரான்ஸ்போர்ட் நிறுவனம் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்த இரு உள்ளூர் நிறுவனங்களும் இத்திட்டம் சம்பந்தமான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாகவும் கூறப்பட்டுள்ளது

வெளிநாட்டு ஊழியர்களை ஏற்றி செல்லும் லாரியும் மற்றொரு லாரியும் மோதி விபத்து – ஒருவர் மரணம்

சிங்கப்பூர் மற்றும் ஆசிய பசிபிக் பிரதேசத்திலும் இந்த மின்சார மோட்டார் சைக்கிள்களை விநியோகம் செய்யும் ஒரே நிறுவனமாக ஸ்ட்ரைட்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

யூரோஸ்போர்ட்ஸ் டெக்னாலஜி இந்த ஆண்டின் இறுதி காலாண்டிற்குள் இந்த வகை மோட்டார் சைக்கிள்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இரண்டு மற்றும் மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் வகைகள் பெரும்பாலும் உணவு விற்பனை மற்றும் லாஜிஸ்டிக்ஸ் பயன்பாடுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்காசிய பிரேதசத்தில், மின்சார வாகனங்கள் சுற்றுச்சூழல் அமைப்பில் வணிகங்களின் வளர்ச்சிக்கான அதன் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த ஒத்துழைப்பு இருப்பதாக ஸ்மார்ட் ரோட் ஹோல்டிங்ஸ் தலைவர் டான் கியான் ஹியோங் கூறியுள்ளார்.

சாலை விதிகளை மீறியதற்காக போக்குவரத்து காவலர்களிடம் சிக்கிய சைக்கிளோட்டிகள்