கசந்து போன இல்லற வாழ்க்கை – சிங்கப்பூரில் அதிகரிக்கும் மணமுறிவு

Photo: Business Insider

இருமனம் இணைந்து வாழும் இல்லற வாழ்க்கையைப் பொறுத்தவரை கடந்த ஆண்டு சிங்கப்பூரில் இன்பமும் துன்பமும் ஒருங்கிணைந்த ஒன்றாகத்தான் குறிப்பிட முடியும்.Covid-19 பெருந்தொற்றை முன்னிட்டு 2020-ஆம் ஆண்டு கடுமையான சுகாதார கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

சென்ற ஆண்டு கட்டுப்பாடுகள் சற்று தளர்த்தப்பட்டன.கட்டுப்பாடுகள் படிப்படியாக தளர்த்தப்பட்டதைத் தொடர்ந்து பல திருமணங்கள் கோலாகலமாக நடந்தன.அதேவேளையில் விவாகரத்துக்களின் எண்ணிக்கையும் அதிகமாகவே பதிவானது.

2021-ஆம் ஆண்டில் மட்டும் சிங்கப்பூரில் சுமார் 28,329 தம்பதிகள் திருமண வாழ்வில் அடியெடுத்து வைத்தனர்.அதற்கு முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் 25.1 சதவீதம் அதிகம் ஆகும்.

2020-ஆம் ஆண்டுக்கு முன்னரே திருமணம் செய்துகொள்ள திட்டமிட்டிருந்தவர்களும் கூட தொற்று பரவலினால் நடத்தவில்லை.தொற்றின் காரணமாக விதிக்கப்பட்ட சுகாதரக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்ட பின்னர் அதிகமானோர் திருமணம் செய்துகொண்டதாக புள்ளிவிவர அமைப்பு நேற்று தகவல்களை வெளியிட்டது.

திருமணங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது இனிய செய்தியாக இருந்தாலும் அதேவேளையில் சுமார் 7,890 தம்பதிகள் திருமண வாழ்கையில் நிகழ்ந்த கசப்பான சம்பவங்களால் விவாகரத்து பெற்றுள்ளனர்.2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 13 சதவீதம் அதிகம் ஆகும்.

கிருமிப்பரவலை முன்னிட்டு ஏற்கனவே விசாரிக்கப்பட்ட விவாகரத்து வழக்குகள் தள்ளி வைக்கப்பட்டன.கடந்த ஆண்டு மீண்டும் விசாரணை செய்யப்பட்டதாகக் கூறப்பட்டது.

தொற்று பரவலின் போது உயிருக்கு ஆபத்தானதாக அஞ்சப்பட்ட அதிமுக்கிய விவாகரத்து வழக்குகளை மட்டுமே குடும்ப நீதிமன்றம் விசாரித்து தீர்ப்பு வழங்கியது.பத்து வருடங்களுக்கு முன்பைவிட சென்ற ஆண்டு குறைவான தம்பதிகளே விவாகரத்து பெற்றதாகவும் கூறப்படுகிறது.