14வது மாடி ஜன்னல் விளிம்பில் சிக்கித்தவித்த நாயை போராடி மீட்ட SCDF அதிகாரிகள்

dog-rescue scdf
Credit: Mothership reader

ஹௌகாங்கில் உள்ள HDB குடியிருப்பின் 14வது மாடி ஜன்னல் விளிம்பில் சிக்கித்தவித்த நாயை SCDF அதிகாரிகள் துரிதமாக மீட்டனர்.

உதவியற்ற நிலையில் தவித்து வந்த அந்த நாயை SCDF அதிகாரிகள் மீட்டுக்கொடுத்ததற்கு பலர் நன்றியை தெரிவித்துள்ளனர்.

சிங்கப்பூரில் புதிய வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கு இவை முக்கியம்: செப்.19 முதல் கட்டாயம் – மீறினால் வேலை அனுமதிச் சலுகைகள் ரத்து

இந்த சம்பவம் கடந்த செப். 9 அன்று பிளாக் 928 ஹௌகாங் ஸ்ட்ரீட் 91 இல் நடந்தது. மீட்கப்பட்ட அந்த நாய் அதன் உரிமையாளரிடம் பத்திரமாக திரும்பியது.

நாய் சிக்கி தவித்ததை கண்ட போலீசார் அதன் உரிமையாளரை தொடர்பு கொண்டு, சம்பவ இடத்திற்கு வருமாறு தெரிவித்தனர். ஆனால், 30 நிமிடங்களுக்குப் பிறகு தான் உரிமையாளர் அங்கு வந்தார்.

GIF from Mothership reader.

இதனை அடுத்து மேற்கொள்ளப்பட்ட மீட்பு நடவடிக்கையில் நாய் கீழே விழுந்தால் அடிபடாமல் இருக்க பாதுகாப்பு வலைகள் மற்றும் மெத்தைகள் அமைக்கப்பட்டன.

இந்த மீட்பு நடவடிக்கை சுமார் நான்கு மணி நேரம் நடந்தது.

அதன் பிறகு நாய் பத்திரமாக மீட்கப்பட்டு அதன் உரிமையாளரிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் வேலை.. உணவு, போக்குவரத்துக்காக நாள் ஒன்றுக்கு S$13 மட்டும் செலவிடும் வெளிநாட்டு ஊழியர்