பயந்து பதுங்கிய நாயிடம் வீரத்தை காட்டும் பராமரிப்பாளர் – நரகத்திற்கு வரவேற்கிறோம்னு டயலாக் வேற !

dog abuse

சிங்கப்பூரில் உள்ள நாய்களை நேசிக்கும் சமூகம், பராமரிப்பு மற்றும் தங்கும் வசதியில் நாய்களை சித்திரவதை செய்யும் இணையத்தில் பரவிய காணொளியைக் கண்டு திகைத்து போனது. சிங்கப்பூரில் உள்ள விலங்குகள் நலக் குழுவான CDAS இந்த வழக்கை பொதுமக்களின் கவனத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

ஜூலை 13 அன்று பகிரப்பட்ட இரண்டு நிமிட காணொளி ஒரு நாளுக்குள் பேஸ்புக்கில் 900 க்கும் மேற்பட்ட பகிர்வுகளைப் பெற்றுள்ளது. சிசிடிவி காட்சியான அந்தக் கானொளியில் ஒரு பழுப்பு நிற மோங்கரல் நாய் கட்டப்பட்டிருந்தது, மேலும் பராமரிப்பாளர் ஒருவர்

“என்னை கடிப்பாயா !

நரகத்திற்கு வரவேற்கிறோம் நண்பரே, நான்கு வாரங்கள் நரகத்திற்கு.” என்று அந்த நாயிடம் கத்துவதை கேட்கலாம்.

மேலும்  அந்த நபர், “நீ ஒரு சத்தம் போடு, உனக்கு என்ன நடக்கிறது என்று பார் !” என்று கூறிக்கொண்டே நாயின் அருகே சென்றார்.  ஒரு மூலையில் பயந்து பின்வாங்கிய நாயை  நெருங்கும் போது, ஒரு உலோக கிண்ணத்தைக் கொண்டு நாயை அடித்தான், ஒரு முறை அல்ல, மூன்று முறை ! தற்காப்பிற்காக ஆக்ரோஷத்தை வெளிப்படுத்திய அந்த பயந்த நாய், இந்த தருணத்திற்கு முன்பு எந்த ஆக்ரோஷத்தையும் காட்டவில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

இச்சம்பவம் K9 வசதியில் நடந்தது என்பதை உறுதிப்படுத்தியதாகவும், இந்த விஷயத்தைப் பற்றி கவனிக்க இந்த கடையின் உரிமையாளரை வலியுறுத்தியுள்ளோம் என்றும் CDAS கூறியுள்ளது.

K9 இன் பேஸ்புக் பக்கத்தில், அவர்களின் பயிற்சியாளர்கள் அங்கீகாரம் பெற்றவர்கள் என்றும், அவர்களின் பராமரிப்பில் உள்ள நாய்களைக் கையாள்வதில் அவர்கள் அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறையை பின்பற்றுகிறார்கள் என்றும் கூறியுள்ளது. ஆனால் K9, CDAS இன் பகிரங்கமான குற்றச்சாட்டை நிவர்த்தி செய்யவில்லை.

K9 இன் வளாகத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது என்பதை மறுக்கவோ அல்லது உறுதிப்படுத்தவோ முடியாது என்றும் விசாரணைகள் நடைபெற்று வருவதால் கருத்து தெரிவிக்க முடியாது என்றும் K9 தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.