வீட்டுப் பணிப்பெண்ணின் இரக்கமற்ற செயல்! – குழந்தையை அடித்து துன்புறுத்திய காட்சிகள் சிசிடிவியில் பதிவு

சிங்கப்பூரில் வேலைக்கு செல்லும் தம்பதியினர் தங்களது குழந்தையை கவனித்துக்கொள்ள நியமித்த வீட்டுப் பணிப்பெண் அவர்களது குழந்தையை எவ்வளவு மோசமாக நடத்துகிறார் என்பதை வீட்டில் பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளைக் கண்டு அதிர்ந்தனர்.

47 வயதான லின் மற்றும் அவரது மனைவி இருவரும் குடும்பத்தின் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக வேலைக்கு செல்வதால் அவர்களது குழந்தையை கவனித்துக்கொள்ள 2021 இல் 27 வயதான பர்மிய உதவியாளரை பணியமர்த்தியுள்ளனர்.

தொடக்கத்தில் பணிப்பெண்ணின் அணுகுமுறை மற்றும் வேலைத்திறன் போன்றவை தம்பதியினரை திருப்தி அடையச் செய்தது.ஆனால் அந்தப் பணிப்பெண் தம்பதியினர் வீட்டில் இல்லாதபோது தங்கள் மகனிடம் கடுமையாக நடந்து கொண்டதை சிசிடிவி காட்சிகள் மூலம் கண்டுபிடித்தனர்.

தம்பதியினர் அலுவலகத்தில் வேலை இல்லாத போது தங்களது குழந்தை எப்படி இருக்கிறார் என்பதைப் பார்க்க அவர்கள் காட்சிகளை சரிபார்ப்பதாகவும் லின் கூறினார்.
ஒரு குறிப்பிட்ட நாளின் நள்ளிரவில் குழந்தை பணிப்பெண்ணை எழுப்பியுள்ளது.ஆத்திரமடைந்த அந்தப் பெண் குழந்தையைச் சுமந்து செல்வதற்கு முன்பு அவள் அவனது தலையில் கடுமையாக அடித்ததை அவர்கள் கவனித்தனர்.
அவளது செயலை கவனித்த லின் அடுத்த நாள் குழந்தையை நன்றாக கவனித்துக்கொள்ளுமாறு அவளுக்கு அறிவுறுத்தினார்.மேலும்,குழந்தையை பராமரிப்பதுதான் மிக அவசியம்.எனவே,மற்ற வீட்டு வேலைகளைச் செய்யாவிட்டாலும் பரவாயில்லை என்று உதவியாளரிடம் கூறியிருக்கிறார்.
இரண்டு மாதங்களுக்குப் பிறகு, உதவியாளர் குழந்தையை கட்டிலின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு தனது கையால் இழுப்பது காட்சிகள் மூலம் தெரியவந்தது.
சில மாதங்களுக்குப் பிறகு குழந்தையின் எடை குறைந்திருப்பதை தம்பதியினர் கவனித்தனர்.தவறு நடந்திருப்பதை உணர்ந்த லின் சிசிடிவி காட்சிகளை முழுமையாக அலசி ஆராய்ந்தார்.மே மாதம் குழந்தையின் பாலை சில மாத்திரைகளால் அவரது உதவியாளர் சுரக்கச் செய்தது தெரியவந்தது.
லின் அந்த உதவியாளரிடம் கேட்ட போது தொடக்கத்தில் தான் எந்த தவறும் செய்யவில்லை என்று மறுத்தார்.லின் காவல்துறைக்கு அழைப்பு விடுத்த பின்னர்,மியான்மரில் இருந்து கொண்டு வந்த பனடோல் மாத்திரைகள் மற்றும் பிற மாத்திரைகளை குழந்தைக்கு உணவளித்ததை உதவியாளர் ஒப்புக்கொண்டார்.
தற்போது காவல்துறை விசாரணை நடத்திவருகிறது.”அவள் ஏன் என் குழந்தைக்கு இவ்வாறு செய்தாள் என்று தெரியவில்லை.இதயம் கனத்துப் போனது,என்னால் அவளை மன்னிக்க முடியவில்லை” என்று லின்னின் மனைவி கூறினார்.