“ஊழியர்கள் நேசிக்கப்பட வேண்டியவர்கள்” – சாதாரண குடும்பத்தை சேர்ந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த முதலாளி

indonesian-helper-first-birthday-celebration-singapore
@anna__leyman Instagram

சிங்கப்பூரில் பணிபுரியும் 39 வயதுமிக்க வெளிநாட்டு வீட்டுப் பணிப்பெண் ஒருவருக்கு, அவரின் முதலாளி இன்ப அதிர்ச்சி கொடுத்த சம்பவம் அனைவரையும் பிரம்மிப்பில் ஆழ்த்தியுள்ளது.

பணிப்பெண்ணாக வீட்டில் பல மாதங்களாக பாடுபடும் அந்த இந்தோனேசியப் பெண், இதுவரை தனது பிறந்தநாளைக் கொண்டாடியதில்லை.

சிங்கப்பூரில் பள்ளி பேருந்து கவிழ்ந்து விபத்து – ஓட்டுநர், குழந்தைகள் 9 பேர் மருத்துவமனையில் அனுமதி

இதனை அறிந்த அவரது சிங்கப்பூர் முதலாளி அவருக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்து மகிழ்வில் ஆழ்த்தினார்.

அந்த வெளிநாட்டு பணிப்பெண்ணுக்கு பிறந்தநாள் சர்ப்ரைஸ் கொடுக்கப்பட்ட காட்சிகள் நேற்று முன்தினம் பிப்ரவரி 6 அன்று சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்டது.

பணிப்பெண்

பணிப்பெண் ரூனா, இந்தோனேசியாவைச் சேர்ந்தவர். இவர் 2021ஆம் ஆண்டு மே மாதம் சிங்கப்பூரில் வேலை செய்யத் தொடங்கினார். இவரின் முதலாளி 34 வயதான அன்னா லேமன்.

தனது குடும்ப சூழ்நிலை காரணமாக ரூனாவின் பிறந்த நாள் என்பது சாதாரண நாளாக கடந்து செல்லும்.

இன்ப அதிர்ச்சி

இந்நிலையில், அவரின் பிறந்தநாள் அன்று, முதலாளியின் இரண்டு மகள்களும் சாக்லேட் கேக்குடன் “பிறந்தநாள் வாழ்த்துக்கள்” என்று பாடியபடி வீட்டிற்குள் சென்று ரூனாவிற்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தனர்.

ஆச்சரியத்தில் உறைந்த ரூனா கண்ணீர் மல்க தரையில் அமர்ந்து திகைத்து போனார். “ஏன் அழுகுறீங்க? ” என்று ரூனாவின் கண்ணீரைத் துடைத்த முதலாளியின் குழந்தையை, கண்ணீருடன் அணைத்து கொண்டார் அவர்.

“ஒவ்வொரு மனிதனும் அவர்கள் யாராக இருந்தாலும் நேசிக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் உங்கள் ஊழியராக இருந்தாலும் சரி அல்லது உங்கள் குடும்பத்தினராக இருந்தாலும் சரி” என அன்னா லேமன் குறிப்பிட்டு மனதளவில் உயர்ந்து நின்றார்.

உட்லண்ட்ஸ் குடியிருப்பில் தீ விபத்து… 50 பேர் வெளியேற்றம்!