சிங்கப்பூரில் 13ஆவது விற்பனை நிலையத்தை நிறுவும் பிரபல ஜப்பானிய குழுமம் – சிங்கப்பூரர்களின் விருப்பமான கடை !

Don Don Donki

சிங்கப்பூரர்களின் விருப்பமான கடையான Don Don Donki அதன் 13வது விற்பனை நிலையத்தை யிஷூனின் நார்த்பாயிண்ட் சிட்டியில்  திறக்கவிருக்கிறது. ஜப்பானிய பேரம் பேசும் வகை கடையான  Don Don Donki ஜூலை 22 அன்று ஒரு ஊடக வெளியீட்டில் பல மாதங்களாக பரவி வந்த வதந்தியை உறுதிப்படுத்தியது. மற்ற Donki ஸ்டோர்களைப் போலவே, தற்போது வரவிருக்கும் கடையிலும் அதன் சொந்த தீம் ஆன wild safari இருக்கும் என்று கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில்  முதல் கடையை திறந்த ஆரம்ப காலத்தில் அறிவிக்கப்பட்ட 10 கடைகளில் இருந்து, தீவு முழுவதும் 20 முதல் 30 கடைகளைத் திறக்க பேரம் பேசத் திட்டமிட்டுள்ளதாக செப்டம்பர் 2021 லேயே தெரிவித்திருந்தார் கடையின் மூலோபாயப் பிரிவு இயக்குநர் மக் ஹனாவா.

சிங்கப்பூரின் மூலை முடுக்கெல்லாம் அதன் விற்பனை நிலையங்கள் இருக்கும் போதிலும் புதிதாக திறக்கப்படும் கடைகளுக்கு உள்ளூர் மக்களிடமிருந்து நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. மேலும் இந்த புதிய கடையில் வாடிக்கையாளர்கள் சில பிரத்தியேகப் பொருட்களையும் ஷாப்பிங் செய்யலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.