வசதி குறைவான இந்திய குடும்பங்களுக்கு உதவி செய்யும் சிங்கப்பூர்

job Singapore cut
Photo: Singapore Minister S.Iswaran Official Facebook Page

சிரமங்கள் கஷ்டங்கள் பொதுவாக அனைத்து குடும்பங்களுக்கும் உண்டு. ஆனால், பொருளாதார ரீதியான சிரமம் கொடுமையானது என்றே கூறலாம்.

வசதியில்லா குடும்பங்களை ஆய்வு செய்து அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்க சிண்டாவின் Door Knocking திட்டம் வழிவகை செய்து வருகிறது.

வெளிநாட்டு ஊழியர்கள் நாட்டுக்குள் கடத்தல்… “S$755 கமிஷன்” – உதவிய 9 பேருக்கு செக்

2016 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டம் ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு தேவையான உதவிகளை செய்துள்ளது.

அதன் அடிப்படையில், தற்போது சுமார் 40 இந்திய குடும்பங்களுக்கு அது உதவி செய்யவுள்ளது. அதாவது அவர்கள் ஜாலான் புக்கிட் மேரா வட்டாரத்தில் வசித்து வருகின்றனர்.

அவர்களின் பிரச்சனைகள் அந்த திட்டத்தின்கீழ் நேரடியாக சென்று கேட்டு அறியப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அவர்களுக்கு நிதி, கல்வி மற்றும் மருத்துவம் போன்றவற்றுக்கான தேவை இருப்பது அதன் மூலமாக கண்டறியப்பட்டது.

இந்திய ஊழியரை காணவில்லை.. ஷேர் செய்து உதவுங்கள் வாசகர்களே!