எப்போது வெளியே செல்வோம் என்ற ஒரே கேள்வியுடன் தனிமையில் வாடும் வெளிநாட்டு ஊழியர்கள்…

Migrant workers dorms community access
(PHOTO: Roslan Rahman/AFP/Getty Images)

தங்கும் விடுதிகளில் கோவிட் -19 கிருமித்தொற்று பரவிய உச்சக் காலக்கட்டத்தில், வெளிநாட்டு ஊழியர்கள் மனநலப் பிரச்சினைகளால் அவதிப்பட்டதாக TODAY முன்னர் கூறியது.

நீண்டகாலத் தனிமையின் காரணமாக அவர்கள் தற்கொலைக்கு முயன்றதாகவும், தகவல்கள் வெளியானதாக அது குறிப்பிட்டது.

ஒரு வருடத்திற்கு மேலாக, தங்கும் விடுதிகளில் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் அவற்றின் குடியிருப்பாளர்களுக்கு மாறுபட்ட தாக்கங்களை ஏற்படுத்தியுள்ளன.

சில வெளிநாட்டுத் ஊழியர்கள் முன்பு இதுபோன்ற கவலை அடைந்ததில்லை என்றும் கூறியுள்ளனர், ​​மற்றவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தை சந்தித்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களிடையே தற்போது உள்ள ஒரே கேள்வி “நாங்கள் எப்போது வெளியே செல்வோம்” என்பதுதான்.

தொற்றுநோய் பரவுவதை தடுக்க அரசாங்கம் பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதை நாம் அறிவோம்.

தடுப்பூசி போட்டுகொண்டோர் விகிதமும் சிங்கப்பூரில் அதிகம். அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையின் காரணமாக சிங்கப்பூரில் கிருமி தொடர்ந்து கட்டுப்பாட்டில் உள்ளது. மற்ற நாடுகளை ஒப்பிடுகையில் சிங்கப்பூரில் இறப்பு விகிதமும் மிகவும் குறைவு.

தங்கும் விடுதிகளில் வசிப்போர் அதிகமானோர் குணமடைந்தவர்கள் அல்லது தடுப்பூசி போட்டுக்கொண்டவர்களாக இருக்கும் பட்சத்தில் தொற்று பரவல் வெகுவாகக் குறையும், அப்போது கட்டுப்பாடுகள் கூடுதலாக தளர்த்தப்படலாம் என்று MOM பேச்சாளர் TODAYம் 4 மாதங்களுக்கு முன்னர் கூறினார்.

சமூக அளவில் பாதிப்பு சற்று அதிகரித்து, தற்போது அது குறைய தொடங்கியுள்ளது. இனி வரும் நாட்களில் நிலைமை தொடர்ந்து கட்டுப்பாட்டில் இருக்கும் பச்சத்தில், ஊழியர்கள் வெளியே அனுப்பப்படலாம் என்பதை நாம் உணர முடிகிறது.

அரசாங்கம் என்ன முடிவு செய்கிறது என்பதை பொறுத்து இருந்து பார்ப்போம்.