வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிகளில் எகிறும் வாடகை… “இனி முதலாளிகள் தான் பார்த்துக்கொள்ள வேண்டும்” – MOM

Singapore dormitory rent
Pic: Nuria Ling/TODAY

சிங்கப்பூரில் அதிகரித்து வரும் செலவுகள் மற்றும் தேவை அதிகரிப்பு காரணமாக வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளில் படுக்கைகளுக்கான சராசரி மாத வாடகை அதிகரித்துள்ளது.

2021 ஆம் ஆண்டு ஒரு ஊழியருக்கு S$280 ஆக இருந்த வாடகை, தற்போது (2023ஆம் ஆண்டு) ஒரு ஊழியருக்கு S$420 ஆக உயர்ந்துள்ளது.

வெளிநாட்டு பணிப்பெண்களுக்கு 6000 இலவச புடவைகள்.. “சொந்த ஊருக்கு அனுப்பி மகிழ்வோம்” – தமிழ்நாட்டு பணிப்பெண்கள்

2023 மே மாத நிலவரப்படி, சிங்கப்பூரில் கட்டுமானம், கடல் மற்றும் செயல்முறைத் துறைகளில் (PCM) சுமார் 434,000 வெளிநாட்டு ஊழியர்கள் work permit அனுமதியுடன் வேலைபார்ப்பதாக கூறப்பட்டுள்ளது.

கடந்த 18 மாதங்களில் மட்டும் சுமார் 112,000 புதிய வெளிநாட்டு ஊழியர்கள் மேற்கண்ட துறைகளில் வேலைகளில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதன் காரணமாக விடுதி படுக்கைகளில் கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக செல்லப்பட்டுள்ளது.

இந்நிலையில், வெளிநாட்டு ஊழியர்கள் தங்கும் விடுதிக்கான தேவை தொடர்ந்து அதிகரிக்க முடியாது என்று MOM எச்சரிக்கை செய்துள்ளது.

முதலாளிகள், ஊழியர்களுக்கான சொந்தமான குடியிருப்புகளை கட்டுவது குறித்து பரிசீலிக்கவும் அது வலியுறுத்தியது.

உற்பத்தித்திறனை அதிகரித்து கொள்ளவும், வெளிநாட்டு ஊழியர்களை நம்பியிருக்கும் போக்கை குறைக்குமாறும் முதலாளிகளுக்கு முன்னர் அமைச்சகம் வலியுறுத்தியது. அதையே MOM மீண்டும் வலியுறுத்தி கூறியுள்ளது.

வெளிநாட்டு ஊழியர்களின் வேலைக்கு புதிய சிக்கல்… 2 ஆண்டுகளில் ஊழியர்களின் எண்ணிக்கை குறையலாம் – MOM எச்சரிக்கை

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள்