வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியில் பணிபுரியும் பாதுகாப்புக் காவலருக்கு சிறை

foreign worker case singapore take action
Pic: Raj Nadarajan/Today

கோவிட்-19 ஸ்வாப் சோதனை முடிவுகள் நிலுவையில் உள்ள சூழலில், வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதியை சேர்ந்த பாதுகாப்புக் காவலர் தனது வீட்டை விட்டு வெளியேறியுள்ளார்.

மருத்துவ விடுப்பில் இருந்த அவர், இரண்டு நாள் திறன் படிப்புக்காக வெளியே சென்றதாக கூறப்படுகிறது.

இனி கட்டாய PCR சோதனை, ஏழு நாள் தனிமை இல்லை: 14 நாள் உடல்நிலையை கண்காணிக்க வேண்டும்

46 வயதான அந்த காவலருக்கு பின்னர் COVID-19 இல்லை என்று எதிர்மறை முடிவு வந்தாலும் கூட, அவர் வெளிநாட்டு ஊழியர்கள் வசிக்கும் தங்கும் விடுதியில் முன்கள ஊழியராக இருந்தார்.

அந்த நேரத்தில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதி, COVID-19 கிருமித்தொற்றால் அதிக ஆபத்து ஏற்படும் பகுதியாக இருந்தது.

ஆல்வின் லியோங் ஜிட் லூங் என்ற அவருக்கு, இன்று திங்கள்கிழமை (டிசம்பர் 13) 24 நாட்கள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

அவர் மருத்துவ விடுப்பில் இருந்தபோதும், மேலும் எதிர்மறை முடிவு பெறாமலும், அவர் தனது வீட்டை விட்டு வெளியேறியதன் காரணமாக தொற்று நோய்கள் சட்டத்தின்கீழ் விதிமுறையை மீறியதாக இரண்டு குற்றச்சாட்டுகளை அவர் ஒப்புக்கொண்டார்.

இது தொடர்பான தண்டனையின் போது மூன்றாவது குற்றச்சாட்டு பரிசீலிக்கப்படுகிறது.

லியோங் Securitas Guarding Servicesஇன் பாதுகாப்பு அதிகாரி ஆவார், Pioneer நார்த்தில் உள்ள சன்வியூ வே தங்கும் விடுதியில் இவர் பணிபுரிகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

32 நாடுகளுடனான சர்வதேச விமான சேவை தொடரும் – இந்தியா