சிங்கப்பூர் பழைய கட்டடங்களுக்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்… துணைப் பிரதமர் ஹெங் அவர்கள் உரை!!

DPM Heng step aside as leader of 4G team
(PHOTO: MCI Photo by Terence Tan. Facebook/Heng Swee Keat)

சிங்கப்பூரில் கார்பன் உமிழ்வு இல்லாத கட்டடங்களை உருவாக்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதைத் தொடர்ந்து துணைப் பிரதமர் ஹெங் சுவீ கியெட் (Heng Swee Keat) அவர்கள் புதிய திட்டம் ஒன்றினை வலியுறுத்தியுள்ளார். அவரது கூற்றுப்படி, சிங்கப்பூரில் கார்பன் உமிழ்வு இல்லாத கட்டடங்களை உருவாக்குவதில் மட்டும் கவனம் செலுத்தக்கூடாது என்றும் பழைய கட்டிடங்களை புதிய கட்டுமான வடிவமைப்புகளுடன் சிறப்பானதாக மாற்ற வேண்டும்.

அவ்வாறு பழைய கட்டடங்களை புதுப்பித்து மேம்படுத்துவதன் மூலம் சில நன்மைகளைப் பெறலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அதன்படி, மிக நெருக்கமாக கட்டடங்கள் அருகருகே அதிகம் இருக்கும் சிங்கப்பூர் போன்ற நகரங்கள் அதன் பருவநிலை இலக்குகளை எட்ட உதவும் என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்நிலையில், சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகம் இரண்டு புதுப்பிக்கப்பட்ட கட்டடங்களைத் திறந்துவைத்துள்ளது. மேலும், இவை செலவுகளை மிச்சப்படுத்துவதுடன் கார்பன் உமிழ்வைக் குறைக்க உதவுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலைக்கழகத்தின் ஆகப் பழைய கட்டடங்களில் இவையும் அடங்கும் என்பதால் புதிய கட்டடங்களுக்காக இவற்றை இடித்துத் தகர்க்காமல் பல்கலைக்கழகம் இவற்றுக்குப் புத்துயிர் கொடுத்துள்ளது. மேலும், பசுமையான வாளகத்தை அமைக்க வேண்டும் என்ற பல்கலைக்கழகத்தின் விரிவான திட்டத்தில் இது ஒரு பகுதியாகும். அதுமட்டுமின்றி, வடிவமைப்பு, சுற்றுப்புறத் துறையின் இந்தக் கட்டடங்கள் 5 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டுள்ளன.