துணைப்பிரதமரின் மலேசியப் பயணம்! – அவருடன் செல்லும் மற்ற அதிகாரிகள்

lawrence wong

சிங்கப்பூரின் துணைப்பிரதமரும் நிதியமைச்சருமான லாரன்ஸ் வோங் மலேசியாவுக்கு பயணம் மேற்கொள்வார் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.அவர் செப்டம்பர் 4 முதல், 7ம் தேதி வரை அதிகாரப்பூர்வ பயணமாக மலேசியாவுக்கு செல்வதாக செய்தி வெளியிடப்பட்டுள்ளன.

சிங்கப்பூரின் துணைப்பிரதமராக வோங்கின் முதல் அதிகாரப்பூர்வ மலேசியப் பயணம் இதுவாகும் என்று பிரதமர் அலுவலகம் மேலும் தெரிவித்துள்ளது.மலேசியப் பிரதமர் இஸ்மாயில் சப்ரி யாக்கோபையும் வோங் சந்திபார்.

மேலும்,அவரது வருகையின்போது , சுல்தான் அப்துல்லா சுல்தான் அஹ்மத் ஷாவுடன் பார்வையாளர்களைக் கொண்டிருப்பார்.துணைப்பிரதமர் வோங்குடன் வெளியுறவு அமைச்சகம், நிதி அமைச்சகம் மற்றும் தகவல் தொடர்பு மற்றும் தகவல் அமைச்சகத்தின் அதிகாரிகள் பயணம் செய்யவுள்ளார்கள்.

அவரை வரவேற்க மலேசியாவின் அமைச்சர்கள் தயார்நிலையில் உள்ளனர்.மலேசியாவின் மூத்த அமைச்சரும் பாதுகாப்பு அமைச்சருமான ஹிஷாமுடின் ஹுசைன், நிதி அமைச்சர் டெங்கு ஜஃப்ருல் அஜீஸ், மத்திய வங்கியின் ஆளுநர் நோர் ஷம்சியா முகமட் யூனுஸ் மற்றும் பிற அரசியல்வாதிகள் மற்றும் தொழிலதிபர்களையும் நேரில் சந்த்தித்து பேசவுள்ளார்.