எப்போது பிரதமர் பதவியேற்கிறார் துணைப் பிரதமர் வோங்? – பதவியேற்பு குறித்து விளக்கமளித்த திரு.வோங்

dpm lawrence wong
சிங்கப்பூரின் பிரதமராக துணைப் பிரதமர் லாரன்ஸ் வோங் எப்போது பதவி ஏற்பார் என்று ஒரு செய்தி நிறுவனம் அவரிடம் கேட்ட போது அது குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை என்று பதிலளித்துள்ளார்.
இருப்பினும் அவரை அந்தப் பதவிக்குத் தயார்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.ஆகஸ்ட் 15 அன்று புளூம்பேர்க் செய்தி நிறுவனத்திடம் பேசிய திரு.வோங் தலைமைத்துவ மாற்றம் தொடர்பாக இரண்டு சாத்தியக்கூறுகளைப் பட்டியலிட்டார்.

முதலாவதாக,வரவிருக்கும் 2025-ஆம் ஆண்டு பொதுத்தேர்தலுக்கு முன்னரே திரு.வோங் பதவியேற்கக் கூடும்.2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்திற்குள் தேர்தல் நடத்தப்பட வேண்டும்.அவ்வாறு தாம் பதவியேற்றால்,மக்கள் செயல் கட்சியையும் 4ஜி தலைவர்களான நான்காம் தலைமுறை அரசியல் தலைவர்களையும் தன்னால் வழிநடத்த முடியும் என்று திரு.வோங் தெரிவித்தார்.

பிரதமர் லீ சியென் லூங் தொடர்ந்து அந்தப் பதவியில் நீடித்து அவர் அடுத்த பொதுத் தேர்தலை வழிநடத்தக்க்கூடும் என்றால் அதன் பின்னர் அவர் பிரதமர் பொறுப்பை தம்மிடம் ஒப்படைக்கக்கூடும் என்று இரண்டாவது சாத்தியக்கூறை விளக்கினார்.

சிங்கப்பூரின் தலைவர்கள் குழுவை அமைப்பது பற்றியும் விரிவுபடுத்தப்பட்டுள்ள தமது பொறுப்பை நன்றாக பழக்கப்படுத்திக் கொள்வது பற்றியும் சிந்திப்பதே இப்போது மிகவும் அவசியமானது என்று தெரிவித்தார்.