“அலறும் ஆந்தை” – மெரினா கால்வாயில் இருந்து அசால்டாக மீட்கப்பட்ட டிக் டாக் வீடியோ

Dragon boaters rescue the owl in Marina channel

ஆந்தை என்றால் அபசகுணம், ஆந்தை ஆகாது என்றெல்லாம் கூறப்படும் ஆந்தைக்கு ஆபத்து வந்தால் உடனடியாக உதவும் மனம் மனிதர்களுக்கு உண்டு என்பது சமீபத்தில் வெளியான டிக் டாக் வீடியோ மூலம் தெரிந்துகொள்ளலாம். தெற்கு சிங்கப்பூரில் அமைந்துள்ள மெரினா கால்வாயில் ஆந்தை ஒன்று வெளியே வர முடியாமல் மிதந்து கொண்டிருந்தது. அங்கு வந்த டிராகன் படகு வீரர்கள் ஆந்தையை காப்பாற்றினர்.

ஆந்தை ஒரு பிளாஸ்டிக் கொட்டகை மூலம் எடுக்கப்படுவதை Tan என்பவர் டிக் டாக் இல் பதிவேற்றம் செய்திருந்தார். கால்வாயில் சிக்கிய ஆந்தை தப்பிப்பதற்கு பல முயற்சிகளை எடுத்தது. அதன் நனைந்த இறக்கைகளை அசைக்க முயன்றது. படகு வீரர்களால் காப்பாற்ற படுவதற்கு முன்பு ஆந்தை சிறகடித்து பறக்க முயன்றது.

தண்ணீரில் தத்தளிக்கும் ஆந்தை தன்னைக் கடித்து விடுமோ என்ற பயத்தில் தனது கைகளுக்கு பதிலாக ஒரு பிளாஸ்டிக் ஸ்கூப்பை பயன்படுத்தி காப்பாற்றியதாக Tan கூறினார். மற்றொருவர் ஆந்தையின் கால் நகங்களை சுட்டிக்காட்டி அது தனது நிலைத்தன்மைக்காக பிடித்தாலும் ,அதை மீட்பவரை கடுமையாக காயப்படுத்தும் அளவிற்கு கூர்மையாக இருப்பதாக கூறினார்.

பாதுகாப்பாக மீட்கப்பட்ட ஆந்தையை பெட்டியில் வைத்து உலர வைத்த பின்னர் Water Sports மையத்திலுள்ள ஊழியர்களிடம் ஒப்படைத்ததாக Tan கூறினார்.

பொதுவாக ஆந்தைகள் தொழில்நுட்ப ரீதியாக நீந்தக் கூடியவை என்றாலும் ,அவை தண்ணீரில் பாதுகாப்பற்றவையாக இருப்பதாக பறவையியல் நிபுணர் Matthew Zwiernik,National Geographic -இடம் கூறினார்.

ஆந்தையும் உயிர்தானே! இவ்வுலகம் அனைவருக்கும் சொந்தம் தானே! என்று ஆபத்திலிருந்து ஆந்தையை படகு வீரர்கள் காப்பாற்றியுள்ளது பாராட்டத்தக்கதாகும்