போக்குவரத்து காவல்துறை அதிகாரியை சாலையில் இழுத்து சென்ற கார் ஓட்டுநர் – சிறை, தடை, அபராதம் விதிப்பு

Man, 22, charged with breaking into NTU dorm
Pic: Today

தப்பிக்கும் முயற்சியில் போக்குவரத்து காவல்துறை அதிகாரி ஒருவரை சாலையில் இழுத்துச் சென்ற கார் ஓட்டுநருக்கு நேற்று (ஜனவரி 27) மீண்டும் வாகனம் ஓட்டத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும், அவர் மீதான நிலுவையிலுள்ள குற்றச்சாட்டுகள் காரணமாக அதிகமான சிறைத் தண்டனையும், வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டது.

கல்லாங் MRT அருகே ரயிலில் அடிபட்டு உயிரிழந்த வெளிநாட்டு ஊழியர்…போதைப்பொருள் அருந்தி தற்கொலை

மேல்முறையீடு வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் ஜாமீனில் வெளியில் இருந்தும், மேலும் வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்ட தடை விதிக்கப்பட்டிருந்தும் அவர் வாகனம் ஓட்டியது அந்த குற்றச்சாட்டுகளில் அடங்கும்.

லீ செங் யானுக்கு, 21 மாதங்கள் 16 வார சிறையும், வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்ட தடையும், மேலும் S$1,000 அபராதமும் விதிக்கப்பட்டது.

அவரது தற்போதைய சிறைத் தண்டனை காலாவதியாகும் போது புதிய சிறைத் தண்டனை தொடங்கும்.

38 வயதான லீ , தனது முந்தைய குற்றத்திற்காக தற்போது நான்கு ஆண்டுகள் ஏழு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார், மேலும் ஜூலை 2020ல் அவருக்கு S$3,700 அபராதம் மற்றும் வாழ்நாள் முழுவதும் வாகனம் ஓட்ட தடையும் விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூரில் ஏற்பட்ட விபத்தில் காலை இழந்த தமிழக ஊழியருக்கு நீங்க நேரடியா உதவி செய்யலாம் – முழு விவரம்