டிப்பர் லாரி மற்றும் லாரி மோதி கடும் விபத்து.. இருக்கையில் சிக்கிய லாரி ஓட்டுநர்

driver-trapped-in-lorry-after-collision-with-tipper-truck

பான்-தீவு விரைவுச்சாலையில் (PIE) டிப்பர் லாரி மற்றும் லாரி மோதிய விபத்தில் 34 வயதான லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கிக்கொண்டார்.

இந்த சம்பவம் ஜனவரி 22 அன்று இரவு 7.30 மணியளவில், ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 2 க்கு வெளியேறும் முன் துவாஸ் நோக்கி செல்லும் பான்-தீவு விரைவுச்சாலையில் நடந்துள்ளது.

லிட்டில் இந்தியாவில் பெண்ணை மானபங்கம் செய்த இளைஞர்.. மொத்தம் 11 ஆண்கள் மீது குற்றச்சாட்டு

மேலும் இந்த விபத்து குறித்து காவல்துறை மற்றும் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படைக்கு (SCDF) தகவல் கொடுக்கப்பட்டது.

விபத்தை அடுத்து, லாரியின் முன்பகுதி கடுமையாக சேதமடைந்தது என்றும், இதன் விளைவாக குறைந்தது இரண்டு பாதைகள் தடைபட்டதாகவும் சீன மொழி ஊடகமான ஷின் மின் டெய்லி நியூஸ் கூறியது.

தகவல் அறிந்து SCDF அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தபோது, ​​லாரி ஓட்டுநர் இருக்கையில் சிக்கியிருப்பதைக் கண்டனர்.

அதன் பின்னர், ஹைட்ராலிக் மீட்பு கருவிகளை பயன்படுத்தி அவரை மீட்டெடுத்தனர்.

பின்னர் அவர் சுயநினைவுடன் தேசிய பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

போலீஸ் விசாரணைகள் நடந்து வருகின்றன.

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பும் சேவையை நடத்திய வெளிநாட்டு கட்டுமான ஊழியருக்கு சிறை