ஓட்டுனர் இல்லா நவீன ‘ஷட்டில் பஸ்’ சோதனை ஓட்டத்தை தொடங்கியது!

Driverless shuttle bus to start passenger trial at NUS Kent Ridge campus.

NUS Kent Ridge வளாகத்தில் பயணிகள் சோதனை ஓட்டங்களை தொடங்கிய நவீன ஓட்டுநர் இல்லா ஷட்டில் பஸ்.

கடந்த ஜூலை 30 ஆம் தேதி இந்த பயணிகள் சோதனை ஓட்டம் தொடங்கப்பட்டது. இதற்கு முன் சுமார் ஒன்றரை மாதம் வரை சாலை சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

ஆபரேட்டர் கம்ஃபோர்ட் டெல்க்ரோ, இஞ்ச்கேப் சிங்கப்பூர், ஈஸிமயில் மற்றும் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகம் (என்யூஎஸ்) இணைந்து ஊடக வெளியீட்டில் இது அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஷட்டில் பஸ்ஸில் 12 பேர் வரை தாராளமாக பயணிக்கலாம். இதில் சக்கர நாற்காலி ஏற்றும் வகையில் பிரத்யேக வடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது. இந்த பஸ் சேவை NUS Kent Ridge வளாகத்தில் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பஸ் சேவை அனைத்து பயணிகளுக்கும் இலவசம் என்றும், இந்த சோதனை ஓட்டங்களில் போது பயணிகளுடன் தகவலை வழங்குவதற்கும், வாகனத்தின் பாதுகாப்பு குறித்த செயல்பாட்டை உறுதி செய்வதற்கும் ஒரு இயக்குனர் உடன் இருப்பார், என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சோதனை பஸ் வார நாட்களில் காலை 10.20 மணி முதல் காலை 11.20 மணி வரையும், அதே போல் பிற்பகல் 2.20 மணி முதல் 3.20 மணி வரை 20 நிமிட இடைவெளியில் செயல்படும். மேலும், இயக்க நேரம் படிப்படியாக நீட்டிக்கப்படும் என்று கூறியுள்ளது.