விதிகளை மறந்து வாகனம் ஓட்டிய 7 பேர் – $5,000 அபராதம்.. வாகனம் ஒட்டத் தடை

drivers banned from driving fined PIE

சிங்கப்பூரில் வாகன ஓட்டிகள் 7 பேருக்கு அபராதம் மற்றும் வாகனம் ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

30க்கும் மேற்பட்ட கார்களில் கூட்டமாக சென்றதில், ஒரு பகுதியினர் அதாவது ஏழு ஆண்களுக்கு நேற்று செவ்வாய்க்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.

மேலும், அவர்களுக்கு 15 முதல் 18 மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டது.

அவர்கள் பான் தீவு அதிவிரைவுச் சாலையில் (PIE) 90kmh என்ற வேக வரம்பை மீறி, சராசரியாக 137kmh முதல் 173kmh வரை பயணித்ததாக பிடிபட்டனர்.

பட்டப்பகலில் ஆயுதம் வைத்து கொள்ளையடிக்க முயற்சி – பெண் ஒருவர் மீது தாக்குதல்

கவனக்குறைவாக, அல்லது வேகமாக அல்லது பொதுமக்களுக்கு ஆபத்து விளைவிக்கும் முறையில் வாகனம் ஓட்டியதற்காக, ஏழு பேரும் தலா ஒரு குற்றத்தை ஒப்புக்கொண்டனர்.

அதில் ஒருவருக்கு 10 நாட்கள் சிறைத்தண்டனையும், இரண்டு ஆண்டுகளுக்கு வாகனம் ஓட்ட ஓட்டத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

இருவருக்கு $5,000 அபராதம் விதிக்கப்பட்டது, மேலும் 18 மாதங்களுக்கு அனைத்து வகை ஓட்டுநர் உரிமங்களையும் வைத்திருக்கவோ அல்லது பெறவோ தடை விதைக்கப்பட்டது.

மற்ற ஐந்து பேருக்கும் தலா $3,000 அபராதம், மேலும் 15 மாதங்களுக்கு வாகனம் ஓட்டுவதற்கு தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

விசா இல்லாமல் உலகின் 192 இடங்களுக்கு பயணிக்கலாம் – உலகின் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் சிங்கப்பூர் 2ஆம் இடம்!