கார் ஓட்டக் கற்றுக்கொடுக்கும் சாக்கில் பெண்ணிடம் சில்மிஷம்! – 61 வயதான பயிற்சியாளருக்குச் சிறை!

Singapore crime dad attack daughter

கார் ஓட்டுவதற்கு பயிற்சி அளிக்கும் நபர் மாணவியை மானபங்கப்படுத்தியது நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டது.லிம் சூ காங் பகுதியில் சோ குவான் ஹப் என்ற பயிற்சியாளர்அவரிடம் வாகனம் ஓட்டிப் பயிற்சி பெற வந்த மாணவியிடம் தகாத முறையில் நடந்துள்ளார்.

2018ஆம் ஆண்து குவான் மீது புகாரளிக்கப்பட்டது.இளம்பெண்ணை மானபங்கம் செய்தது தொடர்பில் இரண்டு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட்டன.தற்போது 61 வயதான குவான் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளில் ஒன்று நிரூபிக்கப்பட்டுள்ளது.

போதுமான ஆதாரங்கள் இல்லாத காரணத்தால் மற்றொரு குற்றச்சாட்டிலிருந்து விடுவிக்கப்பட்டார்.இளம்பெண்ணின் பாதுகாப்புக் கருதி அவரது பெயர் மற்றும் அடையாள விவரங்கள் வெளியிடப்படவில்லை.இதுவரை 24 பயிற்சி வகுப்புகளில் அந்தப் பெண்ணுக்கு கார் ஓட்டப் பயிற்சியளித்துள்ளார்.

ஒரு நாள் காரை நிறுத்தப் பயிற்சியளித்த குவான், பெண்ணை பாலியல் ரீதியாக துன்புறுத்த போவதாகக் கூறி அவளிடம் தகாதவாறு நடந்து கொண்டதாகக் கூறப்படுகிறது.ஆரம்பத்தில் இது குறித்து வெளியே சொல்லத் தயங்கிய பெண்,பின்னர் காதலனிடமும் பெற்றோரிடமும் கூறவே 2 ஆண்டுகள் கழித்து காவல்துறையில் புகாரளிக்கப்பட்டது.

போலீஸ் குவானிடம் விசாரணை செய்த போது தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று கூறி மறுத்தார்.பின்னர் நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டது.