போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கை – 39 வயது பெண் கைது

CNB

போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகளுக்காக 39 வயது சிங்கப்பூர் பெண் கைது செய்யப்பட்டார்.

கடந்த செவ்வாய்க்கிழமை (நவம்பர் 23) மாலை, மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) அதிகாரிகள் அவரை கைது செய்தனர்.

சிங்கப்பூர்-மலேசியா நில VTL பேருந்து சேவை: 20 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்த டிக்கெட்டுகள்

டோவர் கிரசண்ட் (Dover Crescent) அருகே அந்தப் பெண் கைது செய்யப்பட்டார் என்றும், மேலும் அவரிடமிருந்து சுமார் 479 கிராம் ஹெராயின் மற்றும் பல்வேறு போதைப் பொருட்கள் அடங்கிய மூட்டை மற்றும் பொட்டலம் மீட்கப்பட்டது என்றும் CNB செய்திக்குறிப்பில் தெரிவித்தது.

கூடுதலாக, ஐஸ் தொடர்பான போதைப்பொருள் உள்ளிட்டவை அருகிலுள்ள குடியிருப்பு பிரிவில் இருந்து கைப்பற்றப்பட்டன.

அருகில் நிறுத்தப்பட்டிருந்த வாகனத்தில் இருந்து சுமார் 546 கிராம் ஐஸ் போதைப்பொருள் அடங்கிய மூட்டையும், சுமார் 2.183 கிலோ கெட்டமைன் அடங்கிய ஐந்து மூட்டைகளும் கைப்பற்றப்பட்டன.

இந்த நடவடிக்கையின் போது கைப்பற்றப்பட்ட 3 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்களின் மதிப்பு S$268,000 ஆகும்.

விசாரணைகள் நடந்து வருகின்றன.

நிறுவனத்தை ஏமாற்ற போலியாக நடித்த வெளிநாட்டு ஊழியர் விடுவிப்பு