CNB நடத்திய 2 நாள் அதிரடி சோதனை: சிக்கிய 7 பேர் – S$268,000 மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல்

Central Narcotics Bureau

சிங்கப்பூரின் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவு (CNB) நடத்திய அதிரடி சோதனை நடவடிக்கையில் சுமார் S$268,000 மதிப்புள்ள போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

நேற்று முன்தினம் புதன்கிழமை (ஆகஸ்ட் 17) நடத்தப்பட்ட இருவேறு போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளின் போது அவைகள் சிக்கின.

கனரக லாரியில் இருந்து கீழே விழுந்த சரக்கு… கார் மீது மோதி விபத்து

கிளமண்டி, பூன் லே, பேர்ன்வேல் (Fernvale) ஆகிய இடங்களில் இந்த சோதனைகள் நடந்தது குறிப்பிடத்தக்கது.

இரண்டு நடவடிக்கைகளிலும் போதை வஸ்துக்கள், போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டதாக CNB செய்தி வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இதில் 28 முதல் 41 வயதுக்கு உட்பட்ட ஏழு சிங்கப்பூரர்கள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டதாகவும் CNB தெரிவித்துள்ளது.

விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

சாலையில் செல்லும் ஆண்களிடம் விலை பேசும் பெண்கள்… தகாத உறவுக்கு அழைப்பு – சிக்கிய 6 பேர்