அதிரடி சோதனை நடவடிக்கை: S$343,000 பெறுமதியான 8 கிலோ போதைப்பொருட்கள் பறிமுதல்

drugs seized Man arrested
Central Narcotics Bureau

சிங்கப்பூரில் நேற்று முன்தினம் (செப். 6) மற்றும் நேற்று மேற்கொள்ளப்பட்ட மேற்கொள்ளப்பட்ட அதிரடி சோதனை நடவடிக்கையில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

அதோடு, சுமார் S$343,000 பெறுமதியான 8 கிலோவிற்கும் அதிகமான போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இனி சிங்கப்பூர், மலேசியாவில் இருந்து செல்ல முடியாது – விசா அனுமதியை நீக்கிய நாடு

மொத்தம் சுமார் 659 கிராம் ஐஸ் வகை போதைப்பொருள், சுமார் 5 கிலோ கஞ்சா உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டதாக சொல்லப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது தடை செய்யப்பட்ட பொருட்கள் இருப்பதாக நம்பப்படும் பொருட்களும் கைப்பற்றப்பட்டது.

கடந்த செவ்வாயன்று, அந்த சந்தேக நபரை கெய்லாங் சாலை பகுதியில் CNB அதிகாரிகள் கைது செய்தனர்.

சிங்கப்பூர் சட்டப்படி, 250 கிராமுக்கு மேல் மெத்தாம்பெட்டமைன் அல்லது 500 கிராம் கஞ்சா போதைப்பொருள் கடத்திய குற்றவாளிகள் கட்டாய மரண தண்டனையை சந்திக்க நேரிடும்.

ComfortDelGro டாக்ஸி, கிராப் ஃபுட் மிதிவண்டி மோதி விபத்து: ஊழியருக்கு காயம்