மதுவை ‘மடக்மடக்’ என குடிக்கலாமா? – சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகளின் விகிதம்

சிங்கப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரே விகிதத்தில் பதிவாகி வருகின்றன.
ஓராண்டுக்கு 150 முதல் 176 வரை அத்தகைய விபத்துகள் ஏற்படுகின்றன.2020-ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது கடந்த ஆண்டில் குடிபோதையில் வாகனம் ஓட்டிச் சென்றதால் ஏற்பட்ட சாலை விபத்துகளின் எண்ணிக்கை சற்று அதிகரித்து 152 ஆகியது.

இதற்கு மத்தியில்,மது மட்டுமின்றி போதைப்பொருளுக்கு,சூதாட்டத்திற்கு அடிமையாகி பாடிக்கப்பட்டவர்களுக்குச் சிகிச்சை அளிக்கும் ‘விகேர் சமூக சேவை’ என்ற அமைப்பு,வாகனத்தை ஓட்ட முடியாமல் தள்ளாடும் போதுதான் போதை ஏறிவிட்டதாக பெரும்பாலனவர்கள் எண்ணுகிறார்கள் என்றது.ஆனால்,அத்தகைய அறிகுறிகள் தெரியவில்லை என்றாலும் குடித்து விட்டு வாகனம் ஓட்டுவது சிக்கல்தான் என்று அமைப்பு விளக்கியது.
கொஞ்சமாக குடித்தாலும் ஆபத்துதான் என்று அது குறிப்பிட்டது.
ஒருவர் மதுபானத்தை ‘மடக்மடக்’ என்று குடிக்கும்போது உடலில் மதுவின் அடர்த்தி அதிகமாகும்.சாப்பிட்ட பிறகு குடித்தால்,மது உடலில் மெதுவாகவே கலக்கும்.
மது என்றாலே அபாயம் தான்.அதை எவ்வாறு அருந்தினாலும் அதனால் விளையக்கூடிய கேடு உறுதிதான் என்பதை மனத்தில் வைத்துக்கொண்டு தவிர்ப்பது நல்லது.