மது போதையில் லாரியில் தூங்கிய நபர் – நீண்ட நேரம் அடித்த ஹாரன்.. போலீசுக்கு பறந்த புகார்: சிறை, அபராதம், தடை விதிப்பு

வெளிநாட்டு ஊழியரை

சிங்கப்பூர்: நிறுத்தப்பட்டிருந்த லாரியில் ஆடவர் ஒருவர் தூங்கிக்கொண்டிருந்ததை கண்டுபிடித்த போலீசார் அப்டியே தூக்கி சென்றனர்.

இதனை அடுத்து, மது குடித்துவிட்டு வாகனம் ஓட்டியது கண்டறியப்பட்டதை அடுத்து 44 வயதான அவர் மீது ஐந்து வாரங்கள் சிறைத்தண்டனை மற்றும் S$6,000 அபராதம் விதிக்கப்பட்டது.

work permit-ல் வேலைக்கு வந்த ஊழியர்: கடையில் சிறுமியிடம் சில்மிஷ வேலை – தட்டி தூக்கிய போலீஸ்

அதோடு சேர்த்து, சின்னத்தம்பி அருமோ என்ற அவருக்கு ஐந்து ஆண்டுகள் வாகனம் ஓட்டவும் தடை விதிக்கப்பட்டது.

2020 ஆம் ஆண்டு பிப்ரவரி 4, அன்று சின்னத்தம்பி தனது லாரியில் தூங்கிக் கொண்டிருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

அதாவது செங்காங்கில் உள்ள அவரது வீட்டிற்கு அருகிலுள்ள சர்வீஸ் சாலையில் லாரி நிறுத்தப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

அவரின் லாரியில் இருந்து ஹாரன் சத்தம் நீட நேரம் கேட்டதாக போலீசாருக்கு புகார் பறந்தது. இதனை அடுத்து அவர் போலீசிடம் சிக்கினார்.

இதற்கு முன்னர் 2005 ஆம் ஆண்டும் மது அருந்தி வாகனம் ஒட்டிய வழக்கில் அவர் பிடிபட்டார் என்பது கூடுதல் தகவல்.

தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் பாதையில் இலவசமாக பயணிக்க தயாரா? – ஒரு நாள் (நவ.11) சலுகை