ஆசையாக வாங்கிச் சாப்பிட்ட டோனட்டில் கண்ணாடித் துண்டு குத்தி வாயில் ரத்தம் – ஆத்திரமடைந்த பெண் !

dunkin donuts

AMK Hub இல் உள்ள Dunkin’ Donuts கடையிலிருந்து டோனட்டை வாங்கிய ஒரு பெண்மணி டோனட்டில் இருந்த கண்ணாடித் துண்டை கடித்ததால், வாயின் உள்பகுதியில் வெட்டு விழுந்து இரத்தம் வந்துள்ளது.

திப்ஜாய் நபட்சனன் என்னும் 35 வயது  பெண் Double Choc Cake டோனட்டை வாங்கியுள்ளார். அதை சாப்பிடும் பொது கடிகையில், அவரது வாயின் இடது பக்கத்தின் உள்பகுதியில் வெட்டியது. என்னவென்று தெரியாமல் துப்புகையில் அவள் கண்ணாடித் துகள்கள் இருப்பதை கண்டுபிடித்தார். அந்த டோனட்டில் இருந்து எடுக்கப்பட்ட கண்ணாடித் துண்டு 1cm x 1.5cm என்ற அளவில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதில் ஆத்திரமடைந்த அந்த பெண் டோனட்டை வாங்கிய கடைக்கு மீண்டும் சென்றுள்ளார்.

அங்கு சென்றதும் ஊழியர்கள் கடையின் மேலாளரை அழைத்துள்ளனர், ஆனால் அந்த நேரத்தில் மேலாளர் அங்கு இல்லை என்பதால் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்ட ஊழியர்கள் அந்த டோனட்டிற்கான பணத்தை திரும்பச் செலுத்தியுள்ளனர்.

முகநூல் பக்கத்தில் இவற்றை தெரிவித்த அந்த பெண், மேலும் தனது மகள் தினமும் அந்தக்  கடையில் இருந்து டோனட் வாங்குவதாகவும், அவளோ அல்லது வேறொரு குழந்தையோ கண்ணாடித் துண்டை கடித்திருந்தால் என்ன ஆகியிருக்கும் என்று தான் யோசித்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இச்சம்பவத்தை “எங்கே புகார் செய்வது என்று யாருக்காவது தெரியுமா?” என்றும் “விழுங்கி குடலில் சிக்கினால், அறுவை சிகிச்சைக்கு யார் பொறுப்பு?” என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.