என்ன சொல்றீங்க! 10 வாங்கினால் 3 இலவசமா! – திடீரென சரிந்த துரியன் பழங்களின் விலை

durian fruits

சிங்கப்பூரில் துரியன் பழங்களின் இறக்குமதி விகிதம் அதிகரித்துள்ளதால் அவற்றின் விலை சரிந்துள்ளது. இதற்கு முன்பு துரியன் பழங்களின் வரத்து மிகக் குறைவாக இருக்கும் என்பதால் ஒரு கிலோ பழங்கள் $30-க்கு விற்பனையானது.தற்போது மலேசியாவின் மாநிலங்களான Johor மற்றும் Pahang-இலிருந்து ஒரே நேரத்தில் சிங்கப்பூருக்கு இறக்குமதி செய்யப்படுவதால் அவற்றின் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.

பழங்களின் வரத்து 30% அதிகரித்து, விலை 60% குறைந்துள்ளதாக பழக்கடையில் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த ஆண்டு பழங்களின் வரத்து அதிகரித்ததால், விலையில் நேரடியாக கூர்மையான வீழ்ச்சிக்கு வழிவகுத்தது என்றும் கூறுகின்றனர்.
Musang King துரியன்கள் ஒரு கிலோ $12-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மலேசியாவில் உள்ள மொத்த துரியன் விவசாயிகளுடன் தொடர்பு கொள்ள முடிந்ததே விலை சரிவிற்கு காரணம் என்று கடை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

ஞாயிற்றுக்கிழமை அன்று ஐந்து வாங்கினால் ஒன்று இலவசம் மற்றும் 10 வாங்கினால் மூன்று இலவசம் என்று வியாபாரத்தைப் பெருக்க கடை உரிமையாளர்கள் துரியன் பழங்களை இலவசமாக வழங்கினர்.இந்தச் சலுகை ஆனது ஜுன் 17 தொடங்கி ,ஜுன் 19 வரை வழங்கப்பட்டது.

இலவசமாக வழங்கப்பட்டவை மலிவான D13,D101 மற்றும் D1 ரக பழங்களாகும். கிங் முசாங் பழங்கள் இலவசமாக வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும். மொத்தம் 200 கிலோவுக்கும் மேலான துரியன்கள் விற்பனையாகின.நிலச்சரிவினால் நீண்ட வரிசையில் காத்திருந்த வாடிக்கையாளர்கள் ஒவ்வொருவருக்கும் 20 நிமிடங்களுக்கு பிறகே துரியன்கள் வழங்கப்பட்டன.