இப்போ தெரிஞ்சுக்கோங்க ! – சறுக்கிய டுரியன் பழங்களின் விலை; இந்த முறை வரத்து அதிகம்தான்!

durian fruits
டுரியன் பழங்களின் விலை கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிந்துள்ளது.மலேசியாவில் விளைச்சல் அதிகமாக உள்ள காரணத்தால் அவற்றின் விலை கிலோ ஒன்றுக்கு S$10 குறைந்துள்ளது.
ஜோகூர் மற்றும் பகாங்கில் ஒரே நேரத்தில் அறுவடை செய்வதாலும் வரத்து அதிகமாக இருப்பதாலும் விலைச் சரிவினை விற்பனையாளர்கள் ஒப்புக்கொண்டனர்.
பழங்களின் செழிப்பான விளைச்சலுக்கு பருவநிலையும் முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது.எப்போதும் ஆண்டிறுதியில் டுரியன் பழங்களின் வரத்து குறைவாக இருக்கும்.ஆனால்,இந்த முறை மலேசியாவின் இரண்டு மாநிலங்களிலும் ஒரே நேரத்தில் அறுவடை செய்யப்படுவதால் விலை மலிவாகிப் போனது.

டுரியன் பழங்களின் சீசன் வந்துவிட்டதை மக்கள் இன்னும் அறியவில்லை.இதனால் வழக்கமான டுரியன் விற்பனையை விட இந்தாண்டு விற்பனை சுமார் 40 சதவீதம் குறைவாக உள்ளது.
ஆனால்,தற்போது டுரியன் பருவத்தை வாடிக்கையாளர்கள் அறிந்திருப்பதால்,விநியோகம் அதிகரிக்கும்.மேலும்,சிங்கப்பூர் அதிகளவிலான டுரியன்களை இறக்குமதி செய்யும்.எனவே,விலை மேலும் மலிவாகும் வாய்ப்புகள் உள்ளன.