மித மிஞ்சிய விளைச்சல் – துரியன் விற்பனை விலை வீழ்ச்சி.. இப்போதே முந்துங்கள்

Pic: Durian Picking/FB

சிங்கப்பூரில் துரியன் பழத்தின் விலை கிலோ ஒன்றுக்கு S$10 வெள்ளி என குறைந்துள்ளது, அதாவது கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு விலை குறைந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு இறுதிப் பருவத்தில் மலேசியாவில் துரியன் பழங்கள் அதிக அளவில் விளைந்ததே இந்த அதிரடி விலை குறைப்புக்கு காரணம் என சொல்லப்பட்டுள்ளது.

1 வயது சிறுவனைக் கடித்து தின்ற முதலை: காப்பாற்ற முயன்ற தந்தைக்கு பலத்த காயம் – வெளியான அதிர்ச்சி வீடியோ

ஜோகூர் மற்றும் பகாங்கில் இந்த பருவத்தில் ஒரே நேரத்தில் அதிக அளவில் துரியன் பழம் அறுவடை செய்யப்படுவதாகவும், இந்த முறை வரத்து அதிகமாக இருப்பதாகவும் கூறினர்.

இதன் விளைவாக, விலைகளில் சரிவு ஏற்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நல்ல விளைச்சலுக்கு சாதகமான வானிலையும் ஒரு காரணமாக கூறப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் இருந்து திருச்சி… ரூ.18 லட்சம் பொருள் கடத்தல் – சிக்கிய ஊழியர்