சிங்கப்பூரில் துரியனை வெட்டியதும் அலறிய அம்மா – இனி இது போன்று ஏமாந்து வாங்கப் போவதில்லை

durian worm mothership singapore geylong

சிங்கப்பூரில் உள்ள ஒரு குடும்பம் ஜூலை 18 அன்று ஆசையாக வாங்கிய துரியன் பழங்களை உண்பதற்கு முயற்சி செய்தது.ஆனால் அது முடியவில்லை.பழத்தை வெட்டிய பின்பு அதற்குள் கம்பளிப் பூச்சி குடியிருப்பதைக் கண்ட ஜெரால்ட் ஜஸ்டின் கோ அலறினார்.இந்த வீடியோ டிக்டாக்கில் வெளியிடப்பட்டது.

இரவில் குடும்பமாக இணைந்து துரியன் பழங்களை ருசிப்பதற்காக சுமார் 10 பழங்களை S$80 முதல் S$100 வரை கொடுத்து கடையிலிருந்து வாங்கியுள்ளனர்.சமையலறையில் கோவின் அம்மா இரவு உணவு தயார் செய்து கொண்டிருந்த போது,அவரது அம்மா அலறுவதைக் கேட்டார்.துரியனில் கம்பளிப் பூச்சி இருப்பதால் துரியன் மற்றும் பிளாஸ்டிக் பை அனைத்தையும் அப்புறப்படுத்துமாறு கோவிடம் கூறினால்.ஆனால் கோவிற்கு துணிச்சல் இல்லை.

கடைசியாக அவரது மனைவி முழு துரியனையும் அகற்றி அப்புறப்படுத்துமாறு கூறினார்.இனி விலை குறைவு என்று இது போன்ற கடைகளில் பொருட்களை வாங்குவதைத் தவிர்க்கப் போவதாக கோ கூறினார்.

இந்த புழு துரியன் விதைத் துளைப்பான்கள் என்றும் அழைக்கப்படுகின்றன.பழத்தின் விதையை உண்பதற்காக பழத்தில் துளையிட்டு முதிர்ச்சி அடையும் வரை பழத்தினுள்ளே வாழும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.