Pasir Ris -ல் நடத்தப்பட்ட ரமலான் கண்காட்சி இடைநிறுத்தம் – SFA எச்சரிக்கை

ramadan pasir ris

உலகம் முழுவதிலும் வாழும் இஸ்லாமியர்கள் ரம்ஜான் திருநாளை எதிர்நோக்கி ஆவலுடன் காத்திருக்கின்றனர். ரம்ஜானுக்கு முன்பாக நோன்பு, தினசரி தொழுகை என்று ரம்ஜான் பண்டிகையை வரவேற்க இஸ்லாமியர்கள் தயாராகி வருகின்றனர். சிங்கப்பூரில் ரம்ஜான் பண்டிகையை முன்னிட்டு Pasir Ris -ல் தற்காலிக ரம்ஜான் கண்காட்சி நடத்தப்பட்டது.

கண்காட்சியானது சட்டவிரோதமாக செயல்படுவது அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து சிங்கப்பூர் உணவு முகமையால் (SFA) இடைநிறுத்தப்பட்டது. E!Hub@Downtown East-ல் கடந்த ஏப்ரல் 9ஆம் தேதி முதல் தற்காலிகமாக அனுமதி இன்றி Fiesta Ramadan 2022 நடைபெற்று வந்ததாக SFA செவ்வாயன்று தெரிவித்தது.அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது எட்டு உணவு கடைகள் கண்காட்சியில் இயங்கி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.

“உணவு விற்பனையாளர்களின் பட்டியல், உணவு சுகாதார பயிற்சி, தூய்மைப் படுத்துவதற்கான அட்டவணை மற்றும் உணவுப் பொருட்களை சுகாதாரமாக கையாளுவதற்கு சான்று, இதுபோன்ற SFA -ன் தேவைகளை இது நிறைவு செய்யவில்லை” என்று அதிகாரிகள் தெரிவித்தனர் .

செவ்வாய்க்கிழமை முதல் இடை நிறுத்தப்பட்ட கண்காட்சியை நிறுத்துமாறு SFA அறிவித்த எச்சரிக்கையையும் நிறுவனம் புறக்கணித்தது. ஆப்பரேட்டர் மீது அமலாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிறுவனம் மேலும் கூறியது.

விதிமுறைகளை மீறுபவர்கள் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்கும். குற்றவாளிகளுக்கு $10000 வரை அபராதம் விதிக்கப்படும் .தொடர்ந்து அடுத்தடுத்த குற்றச்சாட்டுகளுக்கு மூன்று மாதங்கள் வரை சிறை ,$20000 வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்று SFA தெரிவித்தது.