சிகரெட் புகைத்ததற்கு S$500 அபராதம் – தன் சம்பளத்தில் பாதி என புலம்பெயர் தொழிலாளி கண்ணீர் !

duty-unpaid cigarettes caught

சிங்கப்பூரில் உள்ள பங்களாதேசைச் சேர்ந்த தோட்டக்காரர் ஒருவர் நண்பரிடம் சிகரெட் கேட்டு இருக்கிறார்.அப்போது அவருக்கு வழங்கப்பட்ட சிகரெட்டை புகைத்து அப்போது அவர் சிங்கப்பூர் சுங்க அதிகாரிகளால் தடுத்து நிறுத்தப்பட்டார்.அப்போது அது வரி செலுத்தப்படாத சிகரெட்டு என்பதும், அதை புகைதற்காக அவருக்கு சிங்கப்பூர் டாலர் 500 அபராதமும் விதிக்கப்பட்டது. சிங்கப்பூர் டாலர் 500 என்பது எனது மாத சம்பளத்தில் கிட்டத்தட்ட பாதி என கண்ணீர் விட்டார் அந்த நபர்.

மேலும் அவர் புலம்பெயர் தொழிலாளி என்பதும், தோட்ட வேலை செய்து வந்தவர் என்பதும், அவருக்கு வயது 35 என்பதும் தெரியவந்துள்ளது. வரி செலுத்தப்படாத அந்த சிகரெட்டை தனது நண்பர் தனக்கு தருவார் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும் அந்த நபர் தெரிவித்துள்ளார். மேலும் இந்த சிகரெட்டுகள் சேட் ஆப் மூலம் தான் வாங்கியதாகவும் அவர் கூறியுள்ளார். 

சிங்கப்பூர் சுங்க அதிகாரிகள் சனிக்கிழமை மேற்கொண்ட தேடுதல் வேட்டையின்போது.வரி செலுத்தப்படாத சிகரெட்டுகளை புகைத்து 33 பேரை பிடித்துள்ளனர்.25 பேருக்கு.சிங்கப்பூர் டாலர் 500 – 1300 வரை அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது. தேடுதல் வேட்டையில் 11 சிகரெட்டு பாக்கெட்டுகள் மற்றும் 160 சிகரெட்டுகளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.