சிகரெட்டுகள் தொடர்பாக நடந்தப்பட்ட சோதனையில் மூன்று பேர் கைது

Pexels

வரி செலுத்தப்படாத சிகரெட்டுகள் தொடர்பாக மூன்று பேர் சிங்கப்பூர் சுங்கத் துறையால் கைது செய்யப்பட்டனர்.

மேலும் வரி செலுத்தப்படாத 4,000க்கும் மேற்பட்ட சிகரெட்டு அட்டைப்பெட்டிகள் கைப்பற்றப்பட்டன.

“எங்களுக்கு வெளிநாட்டு ஊழியர்கள் தான் முக்கியம்…” – சிக்கிய கட்டுமான நிறுவனம்

இதில் மொத்தம் S$387,000 அதிகமான தொகை வரி ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளதாக அது கூறியது. அதோடு சரக்கு மற்றும் சேவை வரி (GST) S$30,000 க்கு மேல் ஏய்ப்பு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்ட அவர்கள் மூவரும் 28 மற்றும் 30 வயதுக்கு உட்பட்ட சிங்கப்பூரர்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Ubi Crescentல் உள்ள தொழிற்சாலைக் கட்டிடத்தில் கடந்த டிச.30 ஆம் தேதி சுங்க அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு அவர்களை கைது செய்தனர்.

அவர்கள் பயன்படுத்திய வேன் மற்றும் வரி செலுத்தப்படாத சிகரெட்களைக் கண்டுபிடித்த அதிகாரிகள் அனைத்தையும் பறிமுதல் செய்தனர்.

மீண்டும் முதல்ல இருந்தா… சிங்கப்பூர்-இந்தியா பயணிகளுக்கு தான் கடும் நடைமுறை – NEW Update