இதுல பாட்டுக் கேட்டு பாருங்க ! – சுவாசிக்க சுத்தமான காற்றைத் தரும் கருவி!

dyson air purifier head phone

மனிதன் பாட்டு கேட்டுக்கொண்டே தூய காற்றை சுவாசிக்க கருவி கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ‘டைசன்’ நிறுவனம் மாசு நிறைந்த காற்றை தூய்மைப்படுத்தும் கருவியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்தத் தொழில்நுட்பக் கருவியை மனிதர்கள் அணிந்து பாட்டுக் கேட்டுக்கொண்டே தூய காற்றை சுவாசிக்க முடியும் என்பது இதன் முக்கிய அம்சமாகும்.

இந்தக் கருவியை எதிர்வரும் 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் சிங்கப்பூரர்கள் வாங்க முடியும் என்று ‘டைசன்’ நிறுவனம் அறிவித்துள்ளது.

இதுவரை உலகளாவிய அளவில் வீட்டுப் பொருட்களை உற்பத்தி செய்து வந்த இந்நிறுவனம் அதன் சிங்கப்பூர் மற்றும் பிரிட்டிஷ் ஆய்வுக் கூடங்களில் உருவாக்கிய இந்தக் கருவியின் பெயர் ‘டைசன் சோன்’ ஆகும்.இதன் விற்பனை அடுத்த மாதம் சீனாவில் தொடங்கவுள்ளது.

அதனைத் தொடர்ந்து அமேரிக்கா,பிரிட்டன்,சிங்கப்பூர்,ஹாங்காங் போன்ற நாடுகளில் வரிசையாக விற்பனை செய்யப்படும்.கருவியில் உள்ள இரு காற்று வடிப்பான்களும் ஒரு வருடம் வரை நீடிக்கக் கூடியது.புதுமையானதாக இருந்ததாலும்.கருவியின் தோற்றம் குறித்து சிலர் அதிருப்தி தெரிவித்து வருவதாகக் கூறப்படுகிறது.