வெளிநாட்டு பயணிகளுக்கு பாஸ்போர்ட்டில் கைமுறை முத்திரைகள் படிப்படியாக நிறுத்தப்படும் – ICA

ICA

வெளிநாட்டு பயணிகளின் பாஸ்போர்ட்டில் கைமுறை ஒப்புதல் முத்திரைகள் படிப்படியாக நிறுத்தப்படும் என்று குடிநுழைவு மற்றும் சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தெரிவித்துள்ளது.

அதற்கு பதிலாக அவர்களுக்கு மின்னணு வருகை அனுமதி (e-Pass) செயல்முறை படிப்படியாக தொடங்கும் என்றும் அது கூறியுள்ளது.

வெளிநாட்டில் தடுப்பூசி போட்டுக்கொண்ட பயணிகள் சிங்கப்பூர் வரும் முன் செய்ய வேண்டியவை என்ன? – ICA அப்டேட்

அதாவது முத்திரைகளுக்கு பதில், பயணிகளுக்கு மின்னஞ்சல் மூலம் மின்னணு வருகை அனுமதி (e-Pass) அனுப்பப்படும்.

அதிகபட்சமாக தங்கியிருக்கும் காலம் மற்றும் சிங்கப்பூரில் தங்கியிருக்கும் கடைசி நாள் உட்பட அனுமதி விவரங்கள் அதில் இடம்பெறும்.

e-Pass செயல்முறை கடந்த அக்டோபர் 10 முதல் சாங்கி விமான நிலையத்தில் செயல்படுத்தப்பட்டுள்ளது.

மேலும், சிங்கப்பூரில் உள்ள அனைத்து சோதனைச் சாவடிகளிலும் டிசம்பர் மாதத்திற்குள் அது முழுமையாகச் செயல்படும் என்றும் ICA கூறியுள்ளது.

“சொந்த நாடு சென்றால் வேலையை இழந்துவிடுவோமோ” என்ற கவலையுடன் வெளிநாட்டு ஊழியர்கள் – கட்டுமான நிறுவனம்