சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் விற்பனை – அதிரடி சோதனையில் சிக்கிய நபர்

சட்டத்திற்கு புறம்பான பொருட்கள் விற்பனை - அதிரடி சோதனையில் சிக்கிய நபர்
PHOTO: HSA

வெஸ்ட் மாலில் உள்ள சில்லறை விற்பனை கடையில் இயங்கும் இ-வேப்பரைசர்கள் மற்றும் தொடர்புடைய பாகங்கள் விற்பனை செய்த நபர் பிடிபட்டார்.

ஜனவரி 20 அன்று, வெஸ்ட் மாலில் உள்ள கடையிலும் தெம்பனீஸில் உள்ள குடியிருப்பிலும் சுகாதார அறிவியல் ஆணையம் (HSA) அதிரடி சோதனை நடத்தியது.

சிங்கப்பூர் டோட்டோ டிராவில் S$7.2 மி. பரிசுத்தொகையை தட்டிச் சென்ற ஒரே ஒருவர் – S$1 க்கு டிக்கெட் வாங்கிய அதிஷ்டசாலி

அதில் தடைசெய்யப்பட்ட எலக்ட்ரானிக் வேப்பரைசர்களை (இ-வேப்பரைசர்கள்) மாணவர்களுக்கு விற்பனை செய்த 36 வயது நபர் பிடிபட்டார்.

மேலும், இந்த சோதனை நடவடிக்கையில் இரண்டு இடங்களில் இருந்து மொத்தம் 400க்கும் மேற்பட்ட இ-வேப்பரைசர்கள் மற்றும் 350 உதிரிபாகங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களின் மொத்த மதிப்புகள் S$11,000க்கும் அதிகமாக இருக்கும் என குறிப்பிடப்படுகிறது.

விசாரணைகள் நடந்து வருகிறது.

ஏஜென்சி கூறிய பொய்… முதலாளிக்கும், ஊழியருக்கு மொழியால் ஏற்பட்ட சண்டை – போலீஸ் எடுத்த முடிவு