எகானமி, பிரீமியம் எகானமி என அனைத்து பிரிவு பயணிகளுக்கும் இது இலவசம்… ஜூலை முதல் அமல் – SIA

economy-premium-economy-class-passengers wi-fi
(PHOTO: Reuters)

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் எகானமி (Economy) மற்றும் பிரீமியம் எகானமி (Premium economy) பிரிவுகளில் பயணம் செய்பவரா நீங்கள்.. அப்போ இந்த பதிவு உங்களுத்தான்.

அடுத்த ஜூலை மாதம் முதல் மேற்கண்ட பிரிவுகளில் பயணம் செய்வோருக்கு இலவச Wi-Fi வசதி வழங்கப்படும் என அந்நிறுவனம் கூறியுள்ளது.

இறந்த நிலையில் கிடந்த ஆடவர் உடல்… “ஒரு வாரம் வரவில்லை”- ஊழியர்கள் தேடியதை அடுத்து கண்டெடுப்பு

ஆனால், அந்த இலவச வசதியை பெற நீங்கள் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் KrisFlyer உறுப்பினராக இருக்க வேண்டும்.

இருப்பினும், அதனை இலவசமாக நீங்கள் பதிவு செய்துகொள்ள முடியும் என்ற தகவலையும் அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அனைத்து பிரிவு பயணிகளுக்கும் இலவசமாக Wi-Fi வசதியை வழங்கும் முதல் நிறுவனம் என்ற பெருமையை சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் பெற்றுள்ளது.

விமானத்தில் பயணித்தவாறு தங்கள் அன்புக்குரியவர்களுடன் தொடர்பு கொள்ளலாம், மேலும் செய்திகளை உடனுக்குடன் தெரிந்தும் கொள்ளலாம் என்று SIA செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார்.

இந்த ஏற்பாடு SIA வாடிக்கையாளர்கள் பலரின் வரவேற்பை பெற்றுள்ளது.

சிங்கப்பூரின் முக்கிய செய்திகளை உடனே அறிய Tamil Micset வாட்ஸ்ஆப் குழுவில் இணையுங்கள் – கிளிக் செய்யுங்கள் 

சிங்கப்பூரில் S$18,888 அதிஷ்ட பரிசுத் தொகையை தட்டிச்சென்ற தமிழக ஊழியர்!