பாதிப்பு நமக்குத்தான் ! – காட்டுப்பன்றி மீது மோதியதில் காயமடைந்த நபருக்கு அறுவை சிகிச்சை!

Wild boars feeding fined
(Photo: iStock)
புங்கோலில் உள்ள Promenade Nature Walk வழியாக இரவில் சைக்கிள் ஓட்டி வந்த 70 வயது நபர் குறுக்கே வந்த காட்டுப் பன்றி மீது மோதியதில் பலத்த காயத்திற்கு ஆளானார்.நவம்பர் 29 அன்று இரவு 8 மணியளவில் சியூவ் என்பவருக்கு நடந்த விபத்து குறித்து அவரது மகன் வில்லியம் டிசம்பர் 2 அன்று முகநூலில் கூடுதல் விவரங்களை பகிர்ந்துள்ளார்.
சியூவ் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது 50 கிலோ எடையுள்ள காட்டுப்பன்றி இலைகளில் இருந்து வெளிப்பட்டு பாதையின் குறுக்கே வந்ததால் அதன் மீது மோதியது.மோதிய வேகத்தில் பாதிக்கப்பட்ட நபர் பறந்து சென்று கீழே விழுந்தார்.

சைக்கிள் பாதையில் சறுக்கியது.சம்பவ இடத்திலிருந்த ஒரு தம்பதியினர் அவருக்கு உதவினர்.மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு கண்ணுக்கு அருகில் ஐந்து தையல்கள் போடப்பட்டன.மேலும் அவரது கன்னங்களில் பல எலும்புமுறிவுகள் ஏற்பட்டிருப்பது எக்ஸ்-ரே மற்றும் CT ஸ்கேன்கள் மூலம் தெரிய வந்தது.

தனது தலையில் அணிந்திருந்த தலைக்கவசம் இன்னும் மோசமான காயங்களிலிருந்து பாதுகாத்ததாக பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்தார்.மேலும்,காட்டுப்பன்றிகள் இருப்பதைப் பற்றி பூங்கா பயனர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்த என்ன நடந்தது என்பதைப் பற்றி முகநூலில் பகிர்ந்ததாக வில்லியம் இடுகையில் குறிப்பிட்டார்.