வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?- சிங்கப்பூர் தேர்தல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா?- சிங்கப்பூர் தேர்தல் துறை வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு!
Photo: Google Street View

 

சிங்கப்பூர் அதிபர் ஹலிமா யாக்கோப்பின் பதவிக்காலம் வரும் செப்டம்பர் 13- ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இந்த நிலையில், அதிபர் தேர்தலை நடத்துவதற்கான பணிகளை சிங்கப்பூர் தேர்தல் துறை முடுக்கிவிட்டுள்ளது.

லிட்டில் இந்தியாவில் புல்வெளியில் தவித்த இந்தியர்கள் – விசிட்டிங் வந்தவர்கள் அவதி

அந்த வகையில், சிங்கப்பூர் தேர்தல் துறை (Elections Department Singapore- ‘ELD’) வெளியிட்டுள்ள அறிவிப்பில், “வரும் சிங்கப்பூர் அதிபர் தேர்தலையொட்டி, ஜூன் 1- ஆம் தேதி வரை தகுதியான அனைத்து வாக்காளர்களின் பெயர்கள் அடங்கிய, புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ஜூன் 15- ஆம் தேதி முதல் ஜூன் 28- ஆம் தேதி வரை பொதுமக்கள் சிங்கப்பூர் தேர்தல் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திலோ (அல்லது) வீட்டிற்கு அருகே உள்ள சமூக நிலையத்திற்கு நேரில் சென்றோ வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயர் உள்ளதா என்பதைப் பார்வையிடலாம்.

வாக்காளர் பட்டியலில் பெயர் விடுப்பட்டிருந்தாலும், முகவரி உள்ளிட்ட சுய விவரங்கள் மாறி இருந்தாலும் உடனடியாக சிங்கப்பூர் தேர்தல் துறையின் https://www.eld.gov.sg/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளப் பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம். சிங்பாஸ் செயலி (Singpass App) மூலமாகவும் வாக்காளர் பட்டியலை நேரில் பார்க்கலாம்.

வெளிநாட்டில் உள்ள சிங்கப்பூரர்கள், அவர்கள் வசிக்கும் பகுதியில் தூதரகம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள மையங்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா என்பதை சரிபார்த்துக் கொள்ளலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டில் ஏற்பட்ட விபத்து – மோட்டார் சைக்கிளில் சென்ற சிங்கப்பூரர் மரணம்

சிங்கப்பூர் அதிபர் தேர்தலில் 21 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள் வாக்களிக்க தகுதியானவர்கள். எனினும், அவர்கள் சிங்கப்பூர் குடிமக்களாக இருக்க வேண்டும். சிங்கப்பூரில் குடியிருப்பு முகவரியைக் கொண்டிருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.