சிங்கப்பூரில் 5 வாகன நிறுத்துமிடங்களில் நிறுவப்பட்டுள்ள “மின்சார வாகன சார்ஜர்கள்”

S Iswaran/Facebook

சிங்கப்பூரில் ஐந்து HDB கார் நிறுத்துமிடங்களில் மின்சார வாகன (EV) சார்ஜர்கள் நிறுவப்பட்டுள்ளன என்று போக்குவரத்து அமைச்சர் எஸ் ஈஸ்வரனின் பேஸ்புக் பதிவில் கூறியுள்ளார்.

நிலப் போக்குவரத்து ஆணையம் (LTA) மற்றும் நகர்சீரமைப்பு ஆணையம் (URA) ஆகியவற்றின் பைலட் திட்டத்தின்கீழ் இந்த EV சார்ஜிங் அமைப்பின் முதல் தொகுப்பு நிறுவப்பட்டுள்ளது.

இரட்டை சிறுவர்கள் கொலை வழக்கு: தந்தைக்கு தற்போது வழங்கப்பட்ட தீர்ப்பு என்ன ?

ஜூரோங் வெஸ்ட், பொங்கோல் சென்ட்ரல் மற்றும் யுஷுன் அவென்யூ 9 – ஆகிய இடங்களில் EV சார்ஜிங் பாயிண்ட் நிறுவப்பட்டுள்ளது.

மேலும், URA நிலையத்திலும் EV சார்ஜிங் பாயிண்ட் நிறுவப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

வரும் வாரங்களில் இந்த சார்ஜிங் அமைப்புகள் படிப்படியாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு வரும் என்று இன்று (ஜனவரி 31) ஈஸ்வரன் தனது பேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டின் மூன்றாம் காலாண்டில் சிங்கப்பூரில் உள்ள 200க்கும் மேற்பட்ட பொது வாகன நிறுத்துமிடங்களில் 600க்கும் மேற்பட்ட சார்ஜிங் அமைப்புகள் படிப்படியாகப் பயன்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

காபி ஷாப்பில் வெளிநாட்டு ஊழியரின் பையை நைசாக தூக்கி சென்ற நபர் (CCTV வீடியோ) – வலைவீசி தேடிவரும் போலீஸ்