எலோன் மஸ்க் கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோலை இங்குதான் சந்தித்தாராம்! – ட்விட்டரில் பதிலளித்த மஸ்க்

elon musk denies having affair with brin wife twitter

உலகின் பிரபல பணக்காரரான எலோன் மஸ்க்கிற்கு கூகுள் இணை நிறுவனர் செர்ஜி பிரின் மனைவி நிக்கோல் ஷனஹானுடன் தொடர்பு இருப்பதாக வெளிவந்த தகவல் குறித்து எலோன் பதிலளித்துள்ளார்.பிரின் மற்றும் மஸ்க் இருவரும் நண்பர்களாக இருந்த நிலையில் இனி அவர்கள் நண்பர்களாக இல்லை என்று கூறப்படும் விவகாரத்தின் விளைவாக அறிக்கை வெளியானது.

இந்த அறிக்கைக்கு ட்விட்டரில் பதிலளித்த மஸ்க்,அவர் இன்னும் பிரின் உடன் நண்பர்களாக இருப்பதாகவும், அவர்கள் “நேற்று இரவு ஒன்றாக ஒரு விருந்தில்” கூட கலந்து கொண்டதாகவும் கூறினார்.மேலும் மூன்று ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே நிக்கோலை பார்த்திருப்பதாகக் கூறிய அவர் காதல் எதுவும் இல்லை என்றும் தெரிவித்தார்.

அறிக்கையின்படி,2021 டிசம்பரில் ஷனாஹானுடன் மஸ்க் தனது சுருக்கமான உறவைக் கொண்டிருந்ததாகவும் இந்த விஷயத்தை நன்கு அறிந்தவர்களை சுட்டிக்காட்டியிருப்பதாகவும் கூறப்படுகிறது.பிரின் 2022 ஆம் ஆண்டு முன்னதாக விவாகரத்து கோரி தாக்கல் செய்ததாகவும், இரண்டு உயர் தொழில்நுட்ப கோடீஸ்வரர்களுக்கிடையேயான நீண்ட நட்பை முடிவுக்கு கொண்டு வந்ததாகவும் அறிக்கை மேலும் விவரித்துள்ளது.

பிரின் மற்றும் அவரது மனைவி அந்த நேரத்தில் ஒன்றாக வாழ்ந்து கொண்டிருந்தனர் என்று அறிக்கையில் வெளிவந்தது.இருப்பினும், அதற்குள் பிரின் மற்றும் ஷனஹன் பிரிந்துவிட்டனர்.