எவை மருத்துவ அவசரம்? எவை மருத்துவ அவசரமற்றது?

Photo: Singapore Civil Defence Force Official Facebook Page

 

சிங்கப்பூர் சிவில் பாதுகாப்பு படை (Singapore Civil Defence Force) தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில், “மருத்துவ அவசரத்திற்கு 995 என்ற தொலைபேசி எண்ணைத் தொடர்புக் கொள்ளலாம். அதேபோல் மருத்துவ அவசரமற்றதுக்கு 1777 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) மருத்துவமனையை அணுகலாம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் எவை மருத்துவ அவசரம்? எவை மருத்துவ அவசரமற்றது? என்பதை விரிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

எவை மருத்துவ அவசரம்? (Emergency)

1. மாரடைப்பு,
2. வலிப்பு,
3. மூச்சுத் திணறல்,
4. பக்கவாதம்.

இவை அனைத்தும் மருத்துவ அவசரம் ஆகும். எனவே, மருத்துவ அவசரத்திற்கு பொதுமக்கள் 995 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம்.

எவை மருத்துவ அவசரமற்றது? (Non- Emergency)

1. பல் வலி,
2. வயிற்றுபோக்கு,
3. இருமல்,
4. தலைவலி.

இவை அனைத்தும் மருத்துவ அவசரமற்றது. எனவே, இத்தகைய பாதிப்புகள் தங்களுக்கு ஏற்பட்டால் பொதுமக்கள் 1777 என்ற தொலைபேசி எண்ணை தொடர்புக் கொள்ளலாம் (அல்லது) மருத்துவமனையை அணுகலாம்.