“ஊழியரின் திருமணத்திற்காக புதுக்கோட்டை வந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர்”- அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கி அசத்தல்!

"ஊழியரின் திருமணத்திற்காக புதுக்கோட்டை வந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர்"- அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கி அசத்தல்!
Live Image

 

புதுக்கோட்டை மாவட்டம், கருக்காக்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்தவர் கே.ஆர்.செல்வம். இவர் கடந்த 10 ஆண்டுகளாக சிங்கப்பூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பொறியாளராகப் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில், இவருக்கும், இவரது சகோதரர் கே.ஆர்.சின்னத்துரைக்கும் திருமணம் நிச்சயக்கப்பட்டிருந்தது.

வேலையுடன் சேர்த்து லாரியும் ஓட்டும் வெளிநாட்டு ஊழியர்களுக்கான சட்டம் இது – தெரிந்துகொள்ளுங்கள்

இதையடுத்து, கே.ஆர்.செல்வத்திற்கு அந்நிறுவனம், திருமணத்திற்கு முன்னதாகவே விடுப்பு வழங்கி, சொந்த ஊருக்கு சென்று திருமண வேலைகளைப் பார்க்குமாறு அன்பு கட்டளையிட்டது. அதைத் தொடர்ந்து, கே.ஆர்.செல்வம் சொந்த ஊருக்கு திரும்பும் முன்பாக, தான் பணிபுரியும் நிறுவனத்தின் உரிமையாளர் கால்லின், திட்ட இயக்குனர் ஹம்மிங் மற்றும் திட்ட மேலாளர் டிம் மற்றும் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு திருமண அழைப்பிதழை வழங்கி, அனைவரும் கட்டாயம் எனது திருமணத்திற்கு வர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

"ஊழியரின் திருமணத்திற்காக புதுக்கோட்டை வந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர்"- அரசுப் பள்ளிக்கு நன்கொடை வழங்கி அசத்தல்!
Live Image

அதைத் தொடர்ந்து, ஊழியரின் திருமணத்தின் கலந்து கொள்வதற்காக, சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர் உள்பட மூன்று பேர் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வருகைத் தந்தனர். கறம்பக்குடி சீனிக்கடை முக்கம்பகுதியில் இருந்து குதிரை பூட்டிய சாரட் வண்டியில் செண்டை மேளம் முழங்க திருமண மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.

இந்த திருமணத்திற்கு வருகைத் தந்த தமிழக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மெய்யநாதன், திருமணத்தை நடத்தி வைத்தார். பின்னர், சிங்கப்பூரில் இருந்து தொழிலதிபர் மற்றும் உயரதிகாரிகள் வந்திருப்பதை அறிந்த அமைச்சர், உடனடியாக அவர்களை சந்தித்து, பொன்னாடை அணிவித்து கௌரவித்தார்.

டோட்டோ லாட்டரியில் பிரம்மாண்ட முதல் பரிசு S$12,979,820 – தட்டி சென்ற 4 பேர்.. அதில் ஒருவர் S$1 டிக்கெட் வாங்கியவர்

கருக்காக்குறிச்சி கிராமத்தில் உள்ள அரசுப்பள்ளிக்கு சென்ற சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர் மற்றும் அவரது குழுவினர், பள்ளிக்கு ரூபாய் 1 லட்சத்தை நன்கொடையாக வழங்கினார். அதைத் தொடர்ந்து, பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகளை நட்டு வைத்து தண்ணீர் ஊற்றியும், பள்ளி மாணவ, மாணவிகளின் கலை நிகழ்ச்சிகளையும் கண்டுகளித்தனர். அத்துடன், கிராம மக்களுடன் சிங்கப்பூர் நிறுவனத்தின் உரிமையாளர் கலந்துரையாடினார்.