வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம்… 190 முதலாளிகள் பிடிபட்டனர்

foreigners need social works
Pic: Roslan RAHMAN / AFP

சிங்கப்பூரில் 2015 முதல் 2019 வரை ஒவ்வொரு ஆண்டும் சுமார் 190 முதலாளிகள் தங்கள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு குறைந்த சம்பளம் கொடுத்தது கண்டுபிடிக்கப்பட்டதாக மனிதவள அமைச்சர் ஜோசபின் தியோ தெரிவித்துள்ளார்.

2010 மற்றும் 2014க்கு இடையில் ஒவ்வொரு ஆண்டும் வெளிநாட்டு ஊழியர்களின் சம்பளத்தை குறைத்து வழங்கிய, சராசரியாக 60 முதலாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

உதவி செய்யும் குணத்தில் சிறந்தவர்கள் வெளிநாட்டு ஊழியர்கள் – மூதாட்டிக்கு உதவிய ஊழியர்…!

கடந்த மாதம், 7 ஊழியர்களுக்கு சம்பளம் குறைவாக வழங்கியதற்காக உள்ளூர் நிறுவனமான Twelve Cupcakesக்கு S$119,500 அபராதம் விதிக்கப்பட்டது.

இதில் 2015 மற்றும் 2019க்கு இடையில் அதிகரித்த வழக்குகளின் எண்ணிக்கையானது, அமைச்சகத்தின் மேம்பட்ட கண்டறிதல் திறன்களை காட்டுவதாக அவர் கூறினார்.

மேலும், இது சம்பள முறைகேடுகள் குறித்து புகாரளிக்க வெளிநாட்டு ஊழியர்களை ஊக்குவிக்கும் முயற்சிகளின் விளைவாகும் என்றும் கூறினார்.

இந்த பெரும்பாலான வழக்குகளில் முகவர்களுக்கு சம்பந்தம் இல்லை. இருப்பினும்கூட, அதே 10 ஆண்டு காலக்கட்டத்தில், உரிமம் பெற்ற 6 வேலைவாய்ப்பு முகவர் நிறுவனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டதாக திருமதி தியோ கூறினார்.

வெளிநாட்டு மனிதவள வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ், முதலாளிகள் வெளிநாட்டு ஊழியர்களுக்கு அவர்களின் ஒப்பந்த அடிப்படை மாத சம்பளத்தை வழங்காவிட்டால் அது ஒரு குற்றமாகும்.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர் தங்கும் விடுதிகளுக்கு S$4.6 மில்லியன் திருப்பி அளிப்பு