சிங்கப்பூரில் Employment pass வைத்துள்ளவர்களின் கடந்த 3 ஆண்டு சம்பளம்… கட்டுப்பாடுகள் காரணமாக குறையும் EP

Employment Pass New points system

சிங்கப்பூரில் Employment pass (EP) வைத்திருப்பவர்கள் குறித்து நாடாளுமன்றத்தில் கேள்வி எழுந்தது.

MP பிரீதம் சிங் கேள்விகளுக்கு சிங்கப்பூரின் மனிதவள அமைச்சர் டாக்டர் டான் சீ லெங் பதிலளித்தார்.

வெளிநாட்டு ஊழியர்களுக்கு கடும் கட்டுப்பாடு… பாதிக்கப்படும் சிங்கப்பூர் வாசிகள்!

அதாவது, 2019, 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகள் முறையே எத்தனை EP வைத்திருப்பவர்கள் S$5,000க்கு மேல் சம்பாதித்துள்ளனர் என்று MP பிரீதம் கேள்வி கேட்டிருந்தார்.

இதற்கு பதிலளிக்கும் விதமாக, டிசம்பர் 2019 முதல் டிசம்பர் 2021 வரை, EP வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 193,700 இலிருந்து 161,700 ஆகக் குறைந்துள்ளது என்றார் அமைச்சர் டான்.

இதற்கு முக்கிய காரணம் கோவிட் தொடர்பான விதிக்கப்பட்ட நுழைவுக் கட்டுப்பாடுகள் தான் என்பதையும் சுட்டினார்.

அதே காலகட்டத்தில், S$5,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கும் EP வைத்திருப்பவர்களின் எண்ணிக்கை 82% லிருந்து 87% ஆக அதிகரித்தது, என்றார்.

சிங்கப்பூர் வரும் இந்தியா உள்ளிட்ட அனைத்து பயணிகளுக்கும் புதிய அப்டேட் – Work Pass-க்கும் பொருந்தும்!