சிங்கப்பூரில் Employment Pass அனுமதிக்கு புதிய புள்ளிகள் முறை – வாங்க அதுபற்றி பார்ப்போம்!

Employment Pass New points system

சிங்கப்பூரில் Employment Pass (EP) அனுமதியின்கீழ் வேலை செய்ய விரும்பும் வெளிநாட்டினர் அடுத்த ஆண்டு செப்டம்பர் முதல் புள்ளிகள் முறையின் கீழ் குறைந்தபட்ச மதிப்பெண்ணைப் பெற வேண்டிய நிலை ஏற்படும்.

குறைந்தபட்ச தகுதிச் சம்பளத்துக்கு தகுதி பெற மேற்குறிப்பிட்ட புள்ளி முறையில் அவர்களை குறிப்பிட்ட மதிப்பெண்களை பெற வேண்டும்.

சிங்கப்பூரில் Work permit, S Pass வெளிநாட்டு ஊழியர்களுக்கு இது கட்டாயம் – புதிய விண்ணப்பம், புதுப்பித்தலுக்கு பொருந்தும்

Employment Pass தகுதிச் சம்பளம்

EP வைத்திருக்கும் வெளிநாட்டினர்களுக்கான குறைந்தபட்ச தகுதிச் சம்பளம் S$4,500 இலிருந்து S$5,000 ஆக இந்த செப்டம்பரில் இருந்து மாற்றியமைக்க மனிதவள அமைச்சகம் (MOM) புதிய கட்டமைப்பு வகுத்துள்ளது.

நிதித் துறையைப் பொறுத்தவரை, EP வெளிநாட்டினர்களுக்கான சம்பள அளவுகோல் S$5,500 ஆக அமைக்கப்பட்டுள்ளது.

அதே போல, தொடக்க நிலை வேலைகளுக்கான EP குறைந்தபட்ச சம்பளம் S$5,000 அல்லது S$5,500 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு செப்டம்பர் 1 முதல் புதிய EP விண்ணப்பங்களுக்கும், அதே போல EP புதுப்பிப்பு விண்ணப்பங்களுக்கு ஒரு வருடம் கழித்தும் அதிக ஊதிய அளவுகோல் பொருந்தும்.

EP விண்ணப்பதாரர்கள் பொதுவாக தொழில் நிபுணர்கள், மேலாளர்கள், பொறியாளர்கள் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்கள் (PMET) வேலைகளை நிரப்புகின்றனர்.

புள்ளிகள் முறை

அடுத்த ஆண்டு முதல், EP விண்ணப்பதாரர்கள் இங்கு பணிபுரிய புதிய COMPASS (complementarity Assessment Framework) புள்ளிகள் அமைப்பின் கீழ் போதுமான புள்ளிகளைப் பெற வேண்டும்.

COMPASS முறையின் கீழ் புள்ளிகள் நான்கு பண்புக்கூறுகள் மற்றும் இரண்டு போனஸ் அளவுகோல்களின் அடிப்படையில் வழங்கப்படும். அதன் படி அவர்களை 40 போனஸ் புள்ளிகளை பெற வேண்டும்.

புதிய EP விண்ணப்பங்களுக்கு செப்டம்பர் 2023 முதல், மற்றும் புதுப்பித்தல் விண்ணப்பங்களுக்கு செப்டம்பர் 2024 முதல் இந்த புள்ளி முறை நடைமுறைக்கு வரும்.

Breaking: S Pass க்கு பதிலாக இந்திய ஊழியர்கள் உட்பட சில வேலைகளில் உள்ள ஊழியர்களுக்கு Work permit அனுமதி!